மீனாம்பாள் சிவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Annai Meenambal.jpg|thumb|வலது|அன்னை மீனாம்பாள்]]
 
'''மீனாம்பாள் சிவராஜ்''' '''(அன்னை மீனாம்பாள் சிவராஜ்)''' [[26 டிசம்பர்]], [[1904]] - [[30 நவம்பர்]], [[1992]] பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தனது வாழ்நாள் இலட்சியமாகக்கொண்டு போராடியவர். [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]], [[ஆங்கிலம்]] போன்ற மொழிகளை அறிந்தவர். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக முதல் ஆதிதிராவிடப் பெண். 1942ஆம் ஆண்டில் பட்டியலினததவர் கூட்டமைப்பை (Schedule Castes Federation) உருவாக்கியவர்களுள் ஒருவர்<ref name = meena> Encyclopedia of Dalits in India - Volume 4; Editors: Sanjay Paswan and Paramanshi Jaydeva; Ed.2004; Kalpaz Publicaitons, Delhi-52; page.249-250 </ref>
 
== குடும்பவிபரம் ==
மீனாம்பாள், பறையர் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வி.ஜி.வே.கோ. வாசுதேவப்பிள்ளக்கு மகள். கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட கப்பல் வணிகர் மதுரைப்பிள்ளைக்குப் பேத்தி. இவர் ரங்கூனில் பிறந்தவர். அங்கேயே மெட்ரிக்குலேசன்வரை படித்தவர்.<ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக்93</ref> இவர் தனது 16வது வயதில் 1918இல் பட்டியலின இயக்கத் தலைவரும் பின்னாளில் சென்னை மேயராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்தவருமான இராவ்சாகிப் [[ந. சிவராஜ்]] என்பவரை மணந்தார்.
 
== குடும்பம் ==
மீனாம்பாள், சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1923ஆம் ஆண்டு முதல் 1926ஆம் ஆண்டு வரை உறுப்பினராகவும் இருந்த கோ. வாசுதேவப்பிள்ளக்கும் மீனாட்சி அம்மையாருக்கும் மகள். கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட கப்பல் வணிகர் பெ.ம.மதுரைப்பிள்ளைக்கு மகள்வழிப் பேத்தி. இவர் தந்தைக்குச் சொந்தஊர் வேலூர். பர்மாவில் உள்ள இரங்கூனில் வணிகம் செய்தவர். அங்குதான் மீனாம்பாள் பிறந்தவர். தன் தந்தை ரங்கூனில் உருவாக்கிய மதுரை பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிக்குலேசன் பயின்று தேறினார். பின்னர் இரங்கூன் கல்லூரியில் எஃப்.ஏ (Fellow or Arts) வகுப்பை 1917ஆம் ஆண்டில் நிறைவுசெய்தார். <ref name = meena/> இவர் தனது 16வது வயதில் சென்னைக்கு வந்து 1918இல் பட்டியலின இயக்கத் தலைவரும் பின்னாளில் சென்னை மேயராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்தவருமான இராவ்சாகிப் [[ந. சிவராஜ்]] என்பவரை மணந்தார்.<ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக்93</ref> இவரகளுக்கு 2 ஆண் மக்களும் 2 பெண் மக்களும் பிறந்தனர்.<ref name = shivraj> Encyclopedia of Dalits in India - Volume 4; Editors: Sanjay Paswan and Paramanshi Jaydeva; Ed.2004; Kalpaz Publicaitons, Delhi-52; page.205</ref>
== பொறுப்புகளும் பணிகளும்==
* சென்னை மாநகராட்சி உறுப்பினர் (6 ஆண்டுகள்)
வரிசை 14:
* தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
* சென்னை நகர ரேஷன் ஆலோசனைக்குழு உறுப்பினர்
* சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் - சென்னை மாநகராட்சி அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name = meena/> (13 ஆண்டுகள்)
* போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
* S.P.C.A உறுப்பினர்
வரிசை 34:
* 1929ஆம் ஆண்டு முதலாவது வட்டமேசை மாநாட்டை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.
* 1938ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார்.
* 1938 திசம்பர் 29,30,31 ஆம் நாள்களில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் கலந்துகொண்டார்; அந்த மாநாட்டுப் பந்தலிலேயே 1938 திசம்பர் 31ஆம் நாள், நீதிக்கட்சி தலைவர்களின் ஒப்புதலோடு, ஆதி திராவிடர் மாநாட்டை தனது தலைமையில் கூட்டினார். அதில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது <ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக் 95</ref>
* 1944 செப்டம்பர் 23ஆம் நாள் சென்னையில் பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் சார்பில் பெண்கள் மாநாட்டைக் கூட்டினார். அதில் [[அம்பேத்கார்]] கலந்துகொண்டு உரையாற்றினார்.<ref name = meena/>
* 1945 மே 6ஆம் நாம் பம்பாயில் கூட்டப்பட்ட அனைத்திந்திய பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். <ref name = meena/>
 
==தேர்தல்==
* 1952ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மதுராந்தகம் இரட்டை உறுப்பினர் தொகுதியில் பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.<ref name = meena/>
 
* சென்னை மாகாண சட்டமேலவைக்கு 1952ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.<ref name = meena/>
 
* 1967ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் -பொதுத்தொகுதி- போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.<ref name = meena/>
 
== மறைவு==
மீனாம்பாள் முதுமையில் இந்திய காவல் பணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற தன் மகன் தயாசங்கர் பேணுகையில் வாழ்ந்து 1992 நவம்பர் 30ஆம் நாள் தனது 92ஆம் வயதில் மரணமடைந்தார்.<ref name = meena/>
 
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மீனாம்பாள்_சிவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது