கீட்டோடொன்டைடீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
 
'''கீட்டோடொன்டைடீ''' ''(Chaetodontidae)'', ''[[பேர்சிஃபார்மசு]]'' [[ஒழுங்கு (உயிரியல்)|ஒழுங்கைச்]] சேர்ந்த ஒரு மீன் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும். இவை [[வெப்பவலயம்|வெப்பவலயக்]] கடல் வாழ் மீன்கள். பொதுவாகப் பவளப்பாறைத் திட்டுக்களில் வாழும் இக் குடும்ப மீன்கள் [[அத்திலாந்திக் பெருங்கடல்]], [[இந்தியப் பெருங்கடல்]], [[பசிபிக் பெருங்கடல்]] ஆகிய பெருங்கடல்களில் காணப்படுகின்றன. இக் குடும்பத்தில் 10 [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களில்]] ஏறத்தாழ 120 [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. இந்தியப் பெருங்கடலிலும், பசிபிக் பெருங்கடலிலும் பல [[இன இணைகள்]] (Species pair) காணப்படுகின்றன. மிகப் பெரிய ''[[கீட்டோண்டன்]]'' பேரினத்தின் உறுப்பினங்கள் உண்மையில் இனங்களா அல்லது [[சிற்றினம் (உயிரியல்)|சிற்றினங்களா]] என்பதில் குழப்பம் நிலவி வந்தது. அண்மைக் காலத்தில், டிஎன்ஏ க்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் இத்தகைய குழப்பங்கள் பல தீர்ந்துள்ளன.
 
இவை ஓரளவு சிறிய மீன்களாகும். பெரும்பாலும் 12-22 [[சதம மீட்டர்]] (7-9 [[அங்குலம்]]) நீளம் கொண்டவை. இக் குடும்பத்தில் மிகப்பெரிதாக வளரும் ''கீ. எஃபிப்பியம்'' என்னும் இனத்தைச் சேர்ந்த மீன்கள், 30 சதம மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. [[கறுப்பு]], [[வெள்ளை]], [[நீலம்]], [[சிவப்பு]], [[செம்மஞ்சள்]], [[மஞ்சள் (நிறம்)|மஞ்சள்]] எனப் பல நிறங்களைக் கொண்ட இம் மீன்களை ஆங்கிலத்தில் ''பட்டாம்பூச்சி மீன்'' எனப் பொருள்படும் ''பட்டர்ஃபிளை ஃபிஷ்'' ''(butterflyfish)'' என அழைப்பர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/கீட்டோடொன்டைடீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது