உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 498:
வணக்கம்.
ஏற்றுக்கொள்கிறேன்... ஒன்னார்ச் செகுத்தல்... எனச் செய்யுள் அடிகளில் இடம் பெறுவதைக் கூறலாம். அது செய்யுள் வழக்கு. உலக வழக்கன்று. நிலைமொழி உயர்திணை ஆக இருக்கும் பட்சத்தில் இவ்வாறு வருவது உண்டு. தங்களின் இலக்கணத் தேடல் நுட்பத்தைப் போற்றுகிறேன் [[பயனர்:பாஸ்கர் துரை|பாஸ்கர் துரை]] ([[பயனர் பேச்சு:பாஸ்கர் துரை|பேச்சு]]) 18:57, 2 செப்டம்பர் 2022 (UTC)
 
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
 
இகழ்வார் பொறுத்தல் ... என இடம்பெருமாயின் அல்வழிப் புணர்ச்சி கீழ் எழுவாய் வேற்றுமையாக அமைந்து இகழ்பவரே பொறுத்தல் என்ற வினையைச் செய்பவர் ஆகிவிடுவார். அவ்விடத்தில் நிகழும் பொருண்மை மயக்கத்தை நீக்கவே.
 
இரண்டாம் வேற்றுமைத்
தொகையின் கண் ஒற்று மிகுந்து இகழ்வார் என்ற சொல்லைச் செயப்படுபொருளாக்கிப் பொறுத்தல் என்ற வினையை வேறொரு எழுவாய்க்குக் (தன்மை) கொண்டு சேர்க்கிறது!.
 
தன்மை இகழ்வார் பொறுத்தல் - தன்னைத்தானே திட்டிக் கொள்பவரைப் பொறுத்துக் கொள்ளுதல். அதாவது பைத்தியம் போல் தன்னைத் தானே திட்டிக் கொண்டு திரியும் நிலையைத் சகித்துக் கொண்டு இருத்தல். இச்சொற்றொடரில் எழுவாய் தோன்றா எழுவாயாக இருக்கும்
 
தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் - தன்னை இகழ்வோரைப் பொறுத்தல். ஒற்று வருவதால் இகழ்வார் என்ற சொல் செயப்படுபொருள் தந்து பொருள் மயக்கத்தை நீக்கி வைக்கிறது.
 
ஒன்னார் செகுத்தல் -பகைவர் அழித்தல் இப் பொருண்மையில் ... இந்த இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று வராத காரணத்தினால் இந்த இடத்தில் பகைவர் அழித்தார்கள் (அ) பகைவரை அழித்தார்கள் இருவேறு பொருள்கள் இந்தப் பொருள் மயக்கத்தை நீக்குவதற்காகவே இந்த இடத்தில் ஒற்று மிகுந்து இருக்கிறது. இரண்டாம் வேற்றுமை தொகையில் பொறு மயக்கம் தோன்றாத இடத்தில் ஒற்று மிகுதல் கூடாது .
 
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் பொருள் மயக்கம் தோன்றாத இடத்து ஒற்று மிகுதல் கூடாது. எழுவாய் உயர்திணையாக இருந்து பொருள் மயக்கம் தோன்றுமானால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
 
வாழ்க தமிழ்.... [[பயனர்:பாஸ்கர் துரை|பாஸ்கர் துரை]] ([[பயனர் பேச்சு:பாஸ்கர் துரை|பேச்சு]]) 19:39, 2 செப்டம்பர் 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாஸ்கர்_துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது