ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 28:
==பின்னணி==
ஒக்தாயி [[செங்கிஸ் கான்]] மற்றும் [[போர்ட்டே|போர்ட்டே உஜினின்]] மூன்றாவது மகன் ஆவார். தனது தந்தையின் வளர்ச்சியின் வன்முறை நிறைந்த நிகழ்வுகளில் இவரும் பங்கெடுத்தார். இவருக்கு 17 வயதாக இருந்தபோது, [[சமுக்கா|சமுக்காவின்]] இராணுவத்திற்கு எதிராகத் தெமுஜின் [[கலகல்சித் மணல்பரப்பு யுத்தம்|கலகல்சித் மணல்பரப்பு யுத்தத்தில்]] முழுமையான தோல்வியைச் சந்தித்தார். படுகாயமடைந்த ஒக்தாயி யுத்தகளத்தில் தொலைந்துவிட்டார்.<ref>Secret history of the Mongols, $3, II</ref> இவரது தந்தையின் தத்துத் தம்பியும், தோழனுமான [[போரோகுலா]] இவரை மீட்டுக் கொண்டு வந்தார். இவருக்கு ஏற்கனவே மணமாகி இருந்த பொழுதும் 1204ஆம் ஆண்டு இவரது தந்தை தோற்கடிக்கப்பட்ட ஒரு [[மெர்கிடு]] தலைவனின் மனைவியாகிய [[தோரேசின் கதுன்|தோரேசின் கதுனை]] இவருக்குக் கொடுத்தார். [[ஸ்டெப்பி புல்வெளிகள்|புல்வெளிப்]] பண்பாட்டில் ஒரு மனைவியைச் சேர்த்துக் கொள்வது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று கிடையாது.
 
1206ஆம் ஆண்டு செங்கிஸ் கான், [[ககான்]] பட்டம் பெற்ற பிறகு சலயிர், பேசுத், [[தாய்சியுடு]] மற்றும் கோங்கதன் இனங்களின் ''மிங்கன்கள்'' ஒக்தாயியிக்கு ஒட்டு நிலங்களாகக் கொடுக்கப்பட்டனர். எமில் மற்றும் கோபோக்கு ஆறுகளை ஒக்தாயியின் நிலப்பரப்பானது ஆக்கிரமித்திருந்தது. இவரது தந்தையின் விருப்பப்படி சலயிர் தளபதியான இலுகேயி ஒக்தாயியின் ஆசான் ஆனார்.
 
ஒக்தாயி அவரது சகோதரர்களுடன் 1211ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் [[சின் அரசமரபு (1115–1234)|சின் அரசமரபுக்கு]] எதிராக முதல்முறையாகச் சுதந்திரமாகப் போர்ப் பயணங்களை மேற்கொண்டார். முதலில் தெற்கில் இருந்த நிலப்பகுதியான [[ஏபெய் மாகாணம்]] மற்றும் பிறகு வடக்கே [[சான்சி]] மாகாணத்தில் இருந்த பகுதிகளை அழிக்க 1213ஆம் ஆண்டு அனுப்பப்பட்டார். ஓர்டோஸ் நகரத்தில் இருந்த சின் கோட்டைப் படையினரை ஒக்தாயியின் படைகள் துரத்திவிட்டன. பிறகு [[மேற்கு சியா]], சின் மற்றும் சாங் பகுதிகளின் இணைப்பு நிலப்பரப்புக்கு இவர் பயணம் மேற்கொண்டார்.<ref>Marvin C Whiting ''Imperial Chinese Military History'', p. 355.</ref>
 
[[மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு|மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின்போது]] 1219-20ஆம் ஆண்டில் ஐந்து மாத முற்றுகைக்குப் பிறகு [[ஒற்றார்]] நகரத்தின் குடிமக்களை ஒக்தாயி மற்றும் [[சகதாயி கான்|சகதாயி]] படுகொலை செய்தனர். பிறகு ஊர்கெஞ்ச் மதில் சுவர்களுக்கு வெளியே இருந்த [[சூச்சி|சூச்சியுடன்]] இணைந்து கொண்டனர்<ref>John Joseph Saunders ''The History of the Mongol Conquests'', p. 57.</ref>. சூச்சி மற்றும் சகதாயிக்கு இடையிலான, இராணுவ உத்தி தொடர்பான சச்சரவின் காரணமாக ஊர்கெஞ்ச் முற்றுகையை மேற்பார்வையிடும் பொறுப்பிற்கு ஒக்தாயி செங்கிஸ் கானால் நியமிக்கப்பட்டார்.<ref>John Powell ''Magill's Guide to Military History: Jap-Pel'', p. 1148.</ref> 1221ஆம் ஆண்டு அவர்கள் நகரத்தைக் கைப்பற்றினர். தென்கிழக்குப் பாரசீகம் மற்றும் ஆப்கானித்தானில் கிளர்ச்சி தொடங்கியபோது, ஒக்தாயி [[காசுனி|காசுனியை]] அமைதிப்படுத்தினார்.<ref>Richard Ernest Dupuy, Trevor Nevitt Dupuy ''The encyclopedia of military history'', p. 336.</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது