ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 36:
 
== ககான் ==
[[File:CoronationOfOgodei1229.jpg|thumb|Coronation1229இல் ofஒக்தாயியின் Ögedeiமுடிசூட்டு in 1229விழா, byஓவியம் [[ரசீத்தல்தீன் அமாதனி|Rashid al-Dinரசீத்தல்தீன்]], earlyஆரம்ப 14th14ஆம் centuryநூற்றாண்டு]]
 
1219ஆம் ஆண்டில் [[குவாரசமிய அரசமரபு|குவாரசமியப் பேரரசு]] மீதான படையெடுப்புக்கு முன்னர் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானிடம்]] அவரது வாரிசைத் தேர்ந்தெடுக்குமாறு பேரரசி இசுயி அறிவுறுத்தினார். சூச்சி மற்றும் சகதாயி ஆகிய இரண்டு மூத்த மகன்களுக்கு இடையிலான சச்சரவுக்குப் பிறகு அவர்கள் ஒக்தாயியை வாரிசாகத் தேர்ந்தெடுக்க ஒப்புக் கொண்டனர். செங்கிஸ் கான் இந்த முடிவை உறுதி செய்தார்.
 
செங்கிஸ் கான் 1227ஆம் ஆண்டு இறந்தார். அதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூச்சி இறந்தார். 1229ஆம் ஆண்டு வரை ஒக்தாயியின் தம்பி [[டொலுய்]] பிரதிநிதியாக ஆட்சியைக் கவனித்துக் கொண்டார். 1229ஆம் ஆண்டு ஒக்தாயி ககானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செங்கிஸ் கானின் இறப்பிற்குப் பிறகு, [[கெர்லென் ஆறு|கெர்லென் ஆற்றின்]] கரையில் கோதோ அரால் என்ற இடத்தில் நடந்த [[குறுல்த்தாய்|குறுல்த்தாயில்]] இவர் இவ்வாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒக்தாயி தான் பதவிக்கு வர வேண்டும் என்று தனது விருப்பத்தைச் செங்கிஸ் கான் தெளிவாக வெளிப்படுத்தியதன் காரணமாக, இவர் பதவிக்கு வருவதில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. முடிசூட்டு விழா சடங்கின்படி மூன்று முறை மறுத்த பிறகு, 13 செப்டம்பர் 1229ஆம் ஆண்டு [[மங்கோலியர்|மங்கோலியர்களின்]] ககானாக ஒக்தாயி அறிவிக்கப்பட்டார்.<ref>[[Michael Prawdin]], Gerard (INT) Chaliand, ''The Mongol Empire'', p. 237.</ref> சகதாயி தன் தம்பிக்குத் தொடர்ந்து ஆதரவளித்தார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது