ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 51:
=== மத்தியக் கிழக்கு விரிவாக்கம் ===
குவாரசமியப் பேரரசை அழித்த பிறகு, வேறு எந்தப்பணியுமின்றி செங்கிஸ் கான் [[மேற்கு சியா|மேற்கு சியாவை]] நோக்கி முன்னேறினார். எனினும் 1226ஆம் ஆண்டு குவாரசமியாவின் கடைசி மன்னனாகிய [[சலாலத்தீன் மிங்புர்னு]] தனது தந்தை [[இரண்டாம் அலாவுதீன் முகம்மது]] இழந்த பேரரசுக்குப் புத்துயிர் கொடுக்க [[ஈரான்|ஈரானுக்குத்]] திரும்பினான். மிங்புர்னுவுக்கு எதிராக 1227ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மங்கோலியப் படைகள் தமேகான் என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டன. சலாலத்தீனுக்கு எதிராக அணிவகுத்த மற்றொரு இராணுவமானது [[இசுபகான்|இசுபகானுக்கு]] அருகில் பெரும் இழப்பைச் சந்தித்த பிறகு ஒரு வெற்றியைப் பெற்றது. எனினும் அந்த வெற்றியை அவர்களால் தொடர முடியவில்லை.
 
படையெடுப்பைத் தொடங்க ஒக்தாயியின் விருப்பப்படி சோர்மகன் கோர்ச்சி [[புகாரா|புகாராவில்]] இருந்து 30,000 முதல் 50,000 மங்கோலிய வீரர்களுடன் புறப்பட்டார். குவாரசமியர்களுக்கு ஆதரவான இரண்டு நீண்டகால தளங்களான பாரசீகம் மற்றும் [[குராசான்|குராசானை]] ஆக்கிரமித்தார். 1230ஆம் ஆண்டு [[ஆமூ தாரியா|ஆமூ தாரியாவைக்]] கடந்தார். எவ்வித எதிர்ப்புமின்றி குராசானுக்குள் நுழைந்தார். இவ்வாறாக வேகமாக சோர்மகன் அதைக் கடந்தார். தாயிர் பகதூர் தலைமையில் குறிப்பிடத்தக்க அளவிலான எண்ணிக்கை கொண்ட ஒரு படையினை விட்டுச் சென்றார். தாயிர் பகதூருக்கு மேற்கு [[ஆப்கானித்தான்]] மீது படையெடுக்க மேற்கொண்டு அறிவுறுத்தல்களும் கொடுக்கப்பட்டிருந்தன. சோர்மகன் மற்றும் அவரது பெரும்பாலான இராணுவமானது தபரிசுத்தானுக்குள் நுழைந்தன. இந்த இடம் தற்போதைய மசந்திரன் ஆகும். இது [[காசுப்பியன் கடல்]] மற்றும் [[அல்போர்சு மலைத்தொடர்|அல்போர்சு மலைத்தொடருக்கு]] இடையில் அமைந்த ஒரு பகுதியாகும். 1230ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் இந்த இராணுவமானது தபரிசுத்தானுக்குள் நுழைந்தது. [[நிசாரி இசுமாயிலி அரசு|நிசாரி இசுமாயிலிகளின்]] (அசாசின்கள்) கட்டுப்பாட்டில் இருந்த தெற்கு மலை சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து இவை முன்னேறின.
 
[[இரே, ஈரான்|இரே]] நகரை அடைந்தபோது அங்கு தனது குளிர்கால முகாமை சோர்மகன் அமைத்தார். எஞ்சிய வடக்குப் பாரசீகப் பகுதிகளை அமைதிப்படுத்தத் தனது இராணுவங்களை அனுப்பினார். 1231ஆம் ஆண்டு தனது இராணுவத்தைத் தெற்கு நோக்கிக் கூட்டிச் சென்றார். சீக்கிரமே [[கும்]] மற்றும் [[அமாதான்]] ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். அங்கிருந்து [[பாருசு மாகாணம்|பாருசு]] மற்றும் [[கெர்மான் மாகாணம்|கெர்மான்]] மாகாணங்களுக்குத் தனது இராணுவங்களை அனுப்பினார். அதன் ஆட்சியாளர்கள் சீக்கிரமே அடிபணிந்தனர். தங்களது அரசுகள் அழிக்கப்படுவதற்குப் பதிலாக மங்கோலியப் பிரபுக்களிடம் திறை செலுத்தும் முடிவை எடுத்தனர். அதே நேரத்தில், கிழக்கில் தாயிர் பகதூர் [[காபுல்]], காசுனி மற்றும் சபுலிசுத்தான் ஆகியவற்றை வெல்லும் தனது இலக்கை நோக்கி நிலையாக முன்னேறிக் கொண்டிருந்தார். பாரசீகத்தின் கட்டுப்பாட்டை மங்கோலியர்கள் ஏற்கனவே பெற்றுவிட, சலாலத்தீன் திரான்சு காக்கேசியாவில் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு நாடு கடந்த வாழ்க்கை வாழ்ந்தார். இவ்வாறாகப் பாரசீகத்தின் அனைத்துப் பகுதிகளும் மங்கோலியப் பேரரசுடன் இணைக்கப்பட்டன.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது