ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 55:
 
[[இரே, ஈரான்|இரே]] நகரை அடைந்தபோது அங்கு தனது குளிர்கால முகாமை சோர்மகன் அமைத்தார். எஞ்சிய வடக்குப் பாரசீகப் பகுதிகளை அமைதிப்படுத்தத் தனது இராணுவங்களை அனுப்பினார். 1231ஆம் ஆண்டு தனது இராணுவத்தைத் தெற்கு நோக்கிக் கூட்டிச் சென்றார். சீக்கிரமே [[கும்]] மற்றும் [[அமாதான்]] ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். அங்கிருந்து [[பாருசு மாகாணம்|பாருசு]] மற்றும் [[கெர்மான் மாகாணம்|கெர்மான்]] மாகாணங்களுக்குத் தனது இராணுவங்களை அனுப்பினார். அதன் ஆட்சியாளர்கள் சீக்கிரமே அடிபணிந்தனர். தங்களது அரசுகள் அழிக்கப்படுவதற்குப் பதிலாக மங்கோலியப் பிரபுக்களிடம் திறை செலுத்தும் முடிவை எடுத்தனர். அதே நேரத்தில், கிழக்கில் தாயிர் பகதூர் [[காபுல்]], காசுனி மற்றும் சபுலிசுத்தான் ஆகியவற்றை வெல்லும் தனது இலக்கை நோக்கி நிலையாக முன்னேறிக் கொண்டிருந்தார். பாரசீகத்தின் கட்டுப்பாட்டை மங்கோலியர்கள் ஏற்கனவே பெற்றுவிட, சலாலத்தீன் திரான்சு காக்கேசியாவில் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு நாடு கடந்த வாழ்க்கை வாழ்ந்தார். இவ்வாறாகப் பாரசீகத்தின் அனைத்துப் பகுதிகளும் மங்கோலியப் பேரரசுடன் இணைக்கப்பட்டன.
 
=== சின் அரசமரபின் வீழ்ச்சி ===
{{See also|மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு}}
 
1230ஆம் ஆண்டின் இறுதியில் மங்கோலியத் தளபதி தோகோல்கு செர்பி, சின் அரசமரபினரிடம் அடைந்த எதிர்பாராத தோல்விக்குப் பதிலாகக் காகான் தெற்கே [[சான்சி]] மாகாணத்திற்குத் தன் தம்பி [[டொலுய்|டொலுயுடன்]] சென்றார். பெங்சியாங் நகரத்தைக் கைப்பற்றியதன் மூலம், அப்பகுதியில் சின் படைகளை நீக்கினார். வடக்கே கோடை காலத்தைக் கழித்த பிறகு, அவர்கள் மீண்டும் சின்னுக்கு எதிராக [[ஹெனன்]] பகுதியில் படையெடுப்பு மேற்கொண்டனர். தெற்கு சீனாவின் நிலப்பரப்பு வழியே சென்று சின் அரசமரபின் பின்பகுதி மீது தாக்குதல் நடத்தினர். 1232ஆம் ஆண்டு தன் தலை நகரம் [[கைஃபெங்|கைஃபெங்கில்]] தங்கியிருந்தபோது சின் பேரரசர் [[மங்கோலியர்களின் கைஃபெங் முற்றுகை|முற்றுகையிடப்பட்டார்]]. இறுதிக்கட்டப் படையெடுப்பைத் தனது தளபதிகளிடம் கொடுத்துவிட்டு ஒக்தாயி திரும்பிச் சென்றார். பல நகரங்களைக் கைப்பற்றிய பிறகு, [[சொங் அரசமரபு|சாங் அரசமரபிடமிருந்து]] வந்த தாமதமான உதவிக்குப் பிறகு 1234ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் [[கயிஜோ முற்றுகை|கைசோவின் வீழ்ச்சிக்குப்]] பிறகு சின் அரசமரபை மங்கோலியர்கள் அழித்தனர். எனினும் சாங் அரசமரபின் ஓர் அரசநிர்வாகி ஒரு மங்கோலியத் தூதுவனைக் கொலை செய்தார். சாங் இராணுவங்கள் தங்களது முந்தைய ஏகாதிபத்தியத் தலைநகரங்களான கைஃபேங்கு, [[இலுவோயங்]] மற்றும் சங்கான் ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றின. உண்மையில் இப்பகுதிகள் மங்கோலியர்களால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
 
[[மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு|சின் அரசமரபுடனான போருடன்]] சேர்த்து, 1233ஆம் ஆண்டு ஒக்தாயி புக்சியான் வன்னுவால் நிறுவப்பட்ட கிழக்கு சியாவையும் நொறுக்கினார். தெற்கு [[மஞ்சூரியா|மஞ்சூரியாவை]] அமைதிப்படுத்தினார். அப்பகுதியின் வடக்கே இருந்த நீர் தாதர்களையும் ஒக்தாயி அடிபணிய வைத்தார். 1237ஆம் ஆண்டு அவர்கள் செய்த கலகத்தையும் ஒடுக்கினார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது