ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 85:
 
ஆசியக் கண்டம் முழுவதுமான ஒக்தாயியின் தலைமையிலான மங்கோலிய விரிவாக்கமானது, கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதன்மையான வணிக வழியான [[பட்டுப் பாதை|பட்டுப் பாதையை]] மீண்டும் நிறுவவும், அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டு வரவும் உதவியது.
 
=== கொரியா ===
{{main|கொரியா மீதான மங்கோலியப் படையெடுப்புகள்}}
 
1224ஆம் ஆண்டு தெளிவற்ற சூழ்நிலைகளின் கீழ் ஒரு மங்கோலியத் தூதுவன் கொல்லப்பட்டான். [[திறை]] செலுத்துவதைக் கொரியா நிறுத்தியது.<ref>Michel Hoàng, Ingrid Cranfield ''Genghis Khan'', p. 159.</ref> 1231ஆம் ஆண்டு கொரியாவை அடிபணிய வைக்கவும், தூதுவனின் மரணத்திற்குப் பழி தீர்க்கவும் சரிதை கோர்ச்சியை ஒக்தாயி அனுப்பினார். இராச்சியத்தை அடிபணிய வைப்பதற்காக இவ்வாறாக மங்கோலிய இராணுவங்கள் [[கொரியா மீதான மங்கோலியப் படையெடுப்புகள்|கொரியா மீது படையெடுத்தன]]. கொர்யியோ மன்னர் தற்காலிகமாக அடிபணிந்தார். மங்கோலிய மேற்பார்வையாளர்களை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார். கோடை காலத்தில் மங்கோலியர்கள் பின்வாங்கிய போது, சோயேவு தனது தலைநகரத்தைக் [[கேசாங்|கேசாங்கில்]] இருந்து கங்குவா தீவுக்கு மாற்றினார். கொர்யியோவுக்கு எதிராகப் போர்ப் பயணத்தில் ஈடுபட்டிருந்த சரிதை மீது தொலைவிலிருந்து வந்த ஓர் அம்பு பாய்ந்தது. அவர் இறந்தார்.
 
மங்கோலியத் தூதுவர்களைக் கொன்ற [[கொரியர்கள்]], [[சொங் அரசமரபு|சாங் அரசமரபு]], [[கிப்சாக்குகள்]] மற்றும் அவர்களது ஐரோப்பிய கூட்டாளிகள் மீது படையெடுப்பைத் தொடங்குவதற்கான திட்டங்களை ஒக்தாயி 1234ஆம் ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற குறுல்த்தாயில் அறிவித்தார். தன் குடிமக்களுடன் 40 நகரங்களின் ஆளுநராக இருந்து மங்கோலியர்கள் பக்கம் கட்சி தாவிய கொரியத் தளபதியான போக் ஓங் மற்றும் மங்கோலியத் தளபதி தங்கு ஆகியோரை மங்கோலிய இராணுவத்திற்குத் தளபதிகளாக ஒக்தாயி நியமித்தார். 1238ஆம் ஆண்டு கொர்யியோ அவையானது அமைதிக்குத் தூது விட்டபோது, கொர்யியோ மன்னன் தனக்கு முன்னர் நபராக வந்து நிற்க வேண்டும் என ஒக்தாயி கோரினார். கொர்யியோ மன்னன் கடைசியாகத் தனது உறவினரான இயோங் நோங்குன் சுங்கையும் அவருடன் 10 உயர் குடியினப் பையன்களையும் [[மங்கோலியா|மங்கோலியாவிற்குப்]] பிணையக் கைதிகளாக அனுப்பினார். இவ்வாறாக 1241ஆம் ஆண்டு போரானது தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.<ref>J.Bor ''Mongol hiigeed Eurasiin diplomat shashtir, vol.II'', p. 197.</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது