ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 107:
 
வரி வசூலிக்கும் பணியை வரி விவசாயிகள் என்று அழைக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் கொடுத்த ஒரு அமைப்பை மகமுது எலாவச்சு ஊக்குவித்தார். அவர்கள் வரியை வெள்ளியாகப் பெற்றனர். பாரம்பரியச் சீன முறையிலான அரசாங்கத்தை உருவாக்க ஒக்தாயியை எலு சுகை ஊக்குவித்தார். இம்முறையில் வரி வசூலிப்பு அரசாங்க முகவர்களின் கையிலும், வரி செலுத்தலானது அரசாங்கம் வெளியிட்ட பணத்திலும் நடைபெற்றது. மங்கோலிய உயர் குடியினரால் மூலதனம் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய வணிகர்கள் வரி செலுத்துவதற்குத் தேவையான வெள்ளிக்கு மேலான வட்டிவீதத்தில் கடன்களை வழங்கினர்.<ref name="ReferenceA">{{Cite journal |doi = 10.1080/02634937.2019.1652799|title = The role of the ortoq in the Mongol Empire in forming business partnerships|journal = Central Asian Survey|volume = 38|issue = 4|pages = 531–547|year = 2019|last1 = Enkhbold|first1 = Enerelt|s2cid = 203044817}}</ref> குறிப்பாக இந்த ஓர்ட்டோக் தொழில் முறைகளில் ஒக்தாயி ஈடுபாட்டுடன் முதலீடு செய்தார்.<ref name="ReferenceA"/> அதே நேரத்தில் வெள்ளி இருப்புகளைப் பின்புலமாகக் கொண்ட [[வங்கித்தாள்|வங்கித் தாள்களை]] மங்கோலியர்கள் புழக்கத்தில் விட ஆரம்பித்தனர்.
 
[[File:Ogedei qaghan.svg|thumb|left|40px|பாரம்பரிய[[மொங்கோலிய எழுத்துமுறை|மொங்கோலிய எழுத்துமுறையில்]] ''ஒக்தாயி கான்'']]
 
அரசு விவகாரங்களின் துறைப் பிரிவுகளை ஒக்தாயி ஒழித்தார். மங்கோலியச் சீனாவின் பகுதிகளை எலு சுகையின் அறிவுறுத்தலின்படி, 10 வழிகளாகப் பிரித்தார். மேலும் தனது பேரரசை பெசுபலிக்கு மற்றும் எஞ்சிங் நிர்வாகம் எனப் பிரித்தார். கரகோரத்திலிருந்த பேரரசின் மையமானது மஞ்சூரியா, மங்கோலியா மற்றும் சைபீரியா ஆகிய பகுதிகளை நேரடியாகக் கவனித்துக் கொண்டது. இவரது ஆட்சியின் பிற்பகுதியில் [[ஆமூ தாரியா]] நிர்வாகமானது நிறுவப்பட்டது. மகமுது எலாவச்சு துருக்கிசுத்தானை நிர்வகித்தார். 1229 முதல் 1240 வரை வட சீனாவை எலு சுகை நிர்வகித்தார். சீனாவில் தலைமை நீதிபதியாகச் [[சிகி குதுகு|சிகி குதுகுவை]] ஒக்தாயி நியமித்தார். [[ஈரான்|ஈரானுக்கு]] நிர்வாகிகளாக [[காரா கிதை|காரா கிதையைச்]] சேர்ந்த சின் தெமூரை முதலிலும், பிறகு உயிர் இனத்தைச் சேர்ந்த கோர்குசை இரண்டாவதாகவும் ஒக்தாயி நியமித்தார். கோர்குஸ் ஒரு நேர்மையான நிர்வாகியாகத் தன்னை நிரூபித்தார். பிறகு எலு சுகையின் சில பணிகள் மகமுது எலாவச்சுக்கு மாற்றப்பட்டன. வரிகள் அப்துர் ரகுமானிடம் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் வெள்ளியின் அளவை இருமடங்காக்குவதாக அப்துர் ரகுமான் உறுதியளித்தார்.<ref>David Morgan ''The Mongols'', p. 102.</ref> வழக்கத்திற்கு மாறான அதிகப்படி வட்டி வீதங்கள் எனக் கருதப்படுபவற்றை ஒக்தாயி தடை செய்த போதிலும், ஓர்டோக் அல்லது கூட்டாளி வணிகர்கள் ஒக்தாயியின் பணத்தை விவசாயிகளுக்கு அதிகப்படியான வட்டி வீதத்தில் கடனாகக் கொடுத்தனர். இது வருவாயை அதிகப்படுத்திய போதும், பல மக்கள் வரி வசூலிப்பாளர்களையும், அவர்களது ஆயுதமேந்திய கும்பல்களையும் தவிர்ப்பதற்காகத் தங்களது வீடுகளை விட்டு ஓடினர்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது