ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 111:
 
அரசு விவகாரங்களின் துறைப் பிரிவுகளை ஒக்தாயி ஒழித்தார். மங்கோலியச் சீனாவின் பகுதிகளை எலு சுகையின் அறிவுறுத்தலின்படி, 10 வழிகளாகப் பிரித்தார். மேலும் தனது பேரரசை பெசுபலிக்கு மற்றும் எஞ்சிங் நிர்வாகம் எனப் பிரித்தார். கரகோரத்திலிருந்த பேரரசின் மையமானது மஞ்சூரியா, மங்கோலியா மற்றும் சைபீரியா ஆகிய பகுதிகளை நேரடியாகக் கவனித்துக் கொண்டது. இவரது ஆட்சியின் பிற்பகுதியில் [[ஆமூ தாரியா]] நிர்வாகமானது நிறுவப்பட்டது. மகமுது எலாவச்சு துருக்கிசுத்தானை நிர்வகித்தார். 1229 முதல் 1240 வரை வட சீனாவை எலு சுகை நிர்வகித்தார். சீனாவில் தலைமை நீதிபதியாகச் [[சிகி குதுகு|சிகி குதுகுவை]] ஒக்தாயி நியமித்தார். [[ஈரான்|ஈரானுக்கு]] நிர்வாகிகளாக [[காரா கிதை|காரா கிதையைச்]] சேர்ந்த சின் தெமூரை முதலிலும், பிறகு உயிர் இனத்தைச் சேர்ந்த கோர்குசை இரண்டாவதாகவும் ஒக்தாயி நியமித்தார். கோர்குஸ் ஒரு நேர்மையான நிர்வாகியாகத் தன்னை நிரூபித்தார். பிறகு எலு சுகையின் சில பணிகள் மகமுது எலாவச்சுக்கு மாற்றப்பட்டன. வரிகள் அப்துர் ரகுமானிடம் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் வெள்ளியின் அளவை இருமடங்காக்குவதாக அப்துர் ரகுமான் உறுதியளித்தார்.<ref>David Morgan ''The Mongols'', p. 102.</ref> வழக்கத்திற்கு மாறான அதிகப்படி வட்டி வீதங்கள் எனக் கருதப்படுபவற்றை ஒக்தாயி தடை செய்த போதிலும், ஓர்டோக் அல்லது கூட்டாளி வணிகர்கள் ஒக்தாயியின் பணத்தை விவசாயிகளுக்கு அதிகப்படியான வட்டி வீதத்தில் கடனாகக் கொடுத்தனர். இது வருவாயை அதிகப்படுத்திய போதும், பல மக்கள் வரி வசூலிப்பாளர்களையும், அவர்களது ஆயுதமேந்திய கும்பல்களையும் தவிர்ப்பதற்காகத் தங்களது வீடுகளை விட்டு ஓடினர்.
 
கிறித்தவ எழுத்தரான கதக் மற்றும் [[தாவோயியம்|தாவோயியத்]] துறவியான லீ சிச்சாங் ஆகியோர் ஏகாதிபத்திய இளவரசர்களுக்குப் பயிற்றுவிக்க ஒக்தாயி ஏற்பாடு செய்தார். பள்ளிகளையும், ஒரு கல்வி நிலையத்தையும் கட்டினார். [[பட்டு]] இருப்புகளைப் பின்புலமாகக் கொண்ட காகிதப் பணத்தை புழக்கத்தில் விட ஆணையிட்டார். பழைய பணங்களை அழிக்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு துறையை உருவாக்கினார். ஈரான், மேற்கு மற்றும் வட சீனா, மற்றும் குவாரசமியா ஆகியவற்றில் பெருமளவிலான ஒட்டு நிலங்களைப் பிரித்தளிக்கும் ஒக்தாயியின் செயலானது பேரரசின் சிதறலுக்கு இட்டுச் செல்லும் என எலு சுகை எதிர்ப்புத் தெரிவித்தார்.<ref>Chunjiang Fu, Asiapac Editorial, Liping Yang ''Chinese History'', p. 148.</ref> இதன் காரணமாக, ஒட்டு நிலங்களில் மேற்பார்வையாளர்களை மங்கோலிய மேற்குடியினர் நியமிக்கலாம் எனவும், ஆனால் மற்ற அதிகாரிகள் மற்றும் வரி வசூலிக்கும் பணியை அரசவையே செய்யும் எனவும் ஒக்தாயி ஆணையிட்டார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது