ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 113:
 
கிறித்தவ எழுத்தரான கதக் மற்றும் [[தாவோயியம்|தாவோயியத்]] துறவியான லீ சிச்சாங் ஆகியோர் ஏகாதிபத்திய இளவரசர்களுக்குப் பயிற்றுவிக்க ஒக்தாயி ஏற்பாடு செய்தார். பள்ளிகளையும், ஒரு கல்வி நிலையத்தையும் கட்டினார். [[பட்டு]] இருப்புகளைப் பின்புலமாகக் கொண்ட காகிதப் பணத்தை புழக்கத்தில் விட ஆணையிட்டார். பழைய பணங்களை அழிக்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு துறையை உருவாக்கினார். ஈரான், மேற்கு மற்றும் வட சீனா, மற்றும் குவாரசமியா ஆகியவற்றில் பெருமளவிலான ஒட்டு நிலங்களைப் பிரித்தளிக்கும் ஒக்தாயியின் செயலானது பேரரசின் சிதறலுக்கு இட்டுச் செல்லும் என எலு சுகை எதிர்ப்புத் தெரிவித்தார்.<ref>Chunjiang Fu, Asiapac Editorial, Liping Yang ''Chinese History'', p. 148.</ref> இதன் காரணமாக, ஒட்டு நிலங்களில் மேற்பார்வையாளர்களை மங்கோலிய மேற்குடியினர் நியமிக்கலாம் எனவும், ஆனால் மற்ற அதிகாரிகள் மற்றும் வரி வசூலிக்கும் பணியை அரசவையே செய்யும் எனவும் ஒக்தாயி ஆணையிட்டார்.
 
நிகழ்வுகளுக்கான முன்னுதாரணங்களின் ஒரு பகுதியாக மகா யசாவை ககான் அறிவித்தார். தனது தந்தையின் ஆணைகள் மற்றும் சட்டங்களின் நீடித்த தன்மையை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் தன் ஆணைகள் மற்றும் சட்டங்களையும் அதில் இணைத்தார். குறுல்த்தாய்களின்போது அணியும் ஆடைகள் மற்றும் நடத்தைகள் குறித்த விதிகளை ஒக்தாயி உருவாக்கினார். பேரரசு முழுவதும் 1234ஆம் ஆண்டு இவர் [[யாம்]] நிலையங்களை உருவாக்கினார். அந்த நிலையங்களுக்கு வரும் குதிரை வீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையான ஒரு பணியாளரையும் ஒவ்வொரு நிலையத்திற்கும் நியமித்தார்<ref>Josef W. Meri, Jere L. Bacharach ''Medieval Islamic Civilization'', p. 632.</ref>. ஒவ்வொரு 40 கிலோமீட்டர் தூரத்திற்கும் யாம் நிலையங்கள் நிறுவப்பட்டன. அங்கு வருபவர்களுக்குப் புதுக் குதிரைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான குறிப்பிடப்பட்ட பொருட்களை யாம் பணியாளர்கள் வழங்கினர். யாம் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட குடியிருப்புகள் மற்ற வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன. ஆனால் அவர்கள் கொடுக்கும் பொருட்களுக்குக் குப்சூரி வரியைச் செலுத்த வேண்டியிருந்தது. சகதாயி மற்றும் படு ஆகியோர் தங்களது யாம் நிலையங்களை தனித்தனியாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஒக்தாயி ஆணையிட்டார். உயர்குடியினர் [[கெரஜ்|கெரஜ்கள்]] மற்றும் [[ஜர்லிக்|ஜர்லிக்குகளைக்]] கொடுப்பதற்குக் ககான் தடை செய்தார். கெரஜ் என்பவை பட்டிகைகளாகும். இப்பட்டிகையைக் கொண்டவருக்கு குடிமக்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைக் கோருவதற்கு அதிகாரம் இருந்தது. தசமத்தின் அடிப்படையிலான ஒவ்வொரு 100 [[செம்மறியாடு|செம்மறியாடுகளில்]] ஓர் ஆடானது அப்பிரிவில் உள்ள ஏழைக்காக ஒதுக்கப்பட வேண்டுமென ஒக்தாயி ஆணையிட்டார். ஒவ்வொரு மந்தையிலும் உள்ள ஒரு செம்மறியாடு மற்றும் ஒரு பெண் குதிரை ஆகியவை பெறப்பட்டு ஏகாதிபத்திய மேசையின் மந்தை உருவாக்கப்பட வேண்டுமென ஒக்தாயி ஆணையிட்டார்.<ref>Mongolia Society – Occasional Papers – p. 17.</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது