ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 121:
 
1235 முதல் 1238 வரை நடு மங்கோலியா வழியாகத் தான் ஆண்டுதோறும் [[நாடோடி|நாடோடிப்]] பயணம் மேற்கொள்ளும் வழியின் நிறுத்தங்களில் தொடர்ச்சியான அரண்மனைகள் மற்றும் ஓய்வுக் கூடங்களை ஒக்தாயி கட்டினார். இதில் முதல் அரண்மனையான வனங்கோங் அரண்மனையானது வட சீன கைவினைஞர்களால் கட்டப்பட்டது. இந்த இடத்திற்கு அருகில் வீடுகளைக் கட்டுமாறு தனது உறவினர்களுக்குப் பேரரசர் அறிவுறுத்தினார். இந்தத் தளத்திற்கு அருகில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கைவினைஞர்களைக் குடியமர்த்தினார். [[கரகோரம்|கரகோர]] நகரத்தின் கட்டுமானமானது 1235ஆம் ஆண்டு முடிவு பெற்றது. இந்த நகரத்தில் வெவ்வேறு குடியிருப்புப் பகுதிகளை இஸ்லாமிய மற்றும் வட சீனக் கைவினைஞர்களுக்கு ஒக்தாயி ஒதுக்கினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒக்தாயியின் விருப்பத்திற்குப் பாத்திரமாகுவதற்காகப் போட்டியிட்டனர். நகரத்தைச் சுற்றிலும் நான்கு பக்க வாயிற்கதவுகளைக் கொண்ட மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. இதனுடன் தனிநபர் குடியிருப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. இந்நகரத்திற்கு முன்னர் கிழக்காசியாவில் பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல ஒரு இராட்சதக் கல் ஆமையும், அதன்மேல் கல்வெட்டுத் தூணும் அமைக்கப்பட்டது. தோட்டத்தின் வாயிற்கதவுகளைப் போன்ற கதவுகளைக் கொண்ட ஒரு கோட்டையும் இங்கிருந்தது. தொடர்ச்சியான ஏரிகள் உருவாக்கப்பட்டன. அவை ஏராளமான நீர்ப்பறவைகள் கூடும் இடங்களாகத் திகழ்ந்தன. தன்னுடைய பேரரசின் பௌத்த, இஸ்லாமிய, தாவோயியம் மற்றும் கிறித்தவ மதத்தினருக்காகப் பல வழிபாட்டு இடங்களை ஒக்தாயி உருவாக்கினார். சீனர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒரு கன்பூசியக் கோயில் இருந்தது. அங்கு சீன நாட்காட்டியை மாதிரியாகக் கொண்டு எலு சுகை ஒரு புதிய நாட்காட்டியை உருவாக்கும் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
 
== இயற்பண்பு ==
[[File:Ögedei Khan Statue.JPG|thumb|180px|ஒக்தாயி கானின் சிலை, மங்கோலியா.]]
 
தன் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒக்தாயி தனது தந்தையின் விருப்பத்திற்குரிய மகனாக இருந்தாரெனக் கருதப்படுகிறது. ஒரு வாலிபனாகத் தனது இயற்பண்பைக் கொண்டே தான் கலந்து கொள்ளும் எந்த விவாதத்திலும் சந்தேகம் கொள்பவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய திறமை இவருக்கு இருந்ததாக அறியப்படுகிறது. இவர் உடலளவில் பெரியவராகவும், இனிமையானவராகவும், உளங்கவர் திறன் கொண்ட மனிதனாகவும் இருந்தார். நல்ல நேரங்களை அனுபவிப்பதிலேயே இவருக்குப் பெரும்பாலும் ஆர்வம் இருந்ததாகக் கருதப்படுகிறது. இவர் தனது குணத்தில் புத்திசாலியாகவும், நிலைத் தன்மை உடையவராகவும் இருந்தார். தனது தந்தை அமைத்துக் கொடுத்த பாதையில் மங்கோலியப் பேரரசை வழிநடத்தியதில் இவர் கண்ட வெற்றிக்கு ஒரு பகுதிக் காரணமாக இவரது உளங்கவர் திறனும் கூறப்படுகிறது.{{Citation needed|reason=many Reliable Sources exist-the editor should have referenced!|date=August 2019}}
 
1232ஆம் ஆண்டு தன் தம்பி [[டொலுய்|டொலுயின்]] திடீர் மரணமானது ஒக்தாயியை ஆழமாகப் பாதித்தது. சில ஆதாரங்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஒக்தாயியைக் காப்பாற்றுவதற்காக ஷாமன் மதச் சடங்கில் ஒரு விடம் கலக்கப்பட்ட பானத்தை ஏற்றுக்கொண்டு குடித்ததன் மூலம் தனது சொந்த உயிரைத் தன் அண்ணனுக்காக டொலுய் தியாகம் செய்தார் எனக் குறிப்பிடுகின்றன.<ref>Denis Sinor, John R. Krueger, Rudi Paul Lindner, Valentin Aleksandrovich ''The Uralic and Altaic Series'', p. 176.</ref> மற்ற ஆதாரங்கள், மதுப் பழக்கமுடைய டொலுயை ஷாமன்களின் உதவியுடன் மருந்து கொடுத்து ஒக்தாயி திட்டமிட்டு இறக்க வைத்ததார் எனக் குறிப்பிடுகின்றன.<ref>{{Cite book|title=The secret history of the mongol queens : how the daughters of Genghis Khan rescued his empire|last=Weatherford, Jack.|year=2011|isbn=9780307407160|pages=92|oclc=915759962}}</ref>
 
==மேலும் காண்க==
* [[குப்லாய் கான்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது