ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 128:
 
1232ஆம் ஆண்டு தன் தம்பி [[டொலுய்|டொலுயின்]] திடீர் மரணமானது ஒக்தாயியை ஆழமாகப் பாதித்தது. சில ஆதாரங்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஒக்தாயியைக் காப்பாற்றுவதற்காக ஷாமன் மதச் சடங்கில் ஒரு விடம் கலக்கப்பட்ட பானத்தை ஏற்றுக்கொண்டு குடித்ததன் மூலம் தனது சொந்த உயிரைத் தன் அண்ணனுக்காக டொலுய் தியாகம் செய்தார் எனக் குறிப்பிடுகின்றன.<ref>Denis Sinor, John R. Krueger, Rudi Paul Lindner, Valentin Aleksandrovich ''The Uralic and Altaic Series'', p. 176.</ref> மற்ற ஆதாரங்கள், மதுப் பழக்கமுடைய டொலுயை ஷாமன்களின் உதவியுடன் மருந்து கொடுத்து ஒக்தாயி திட்டமிட்டு இறக்க வைத்ததார் எனக் குறிப்பிடுகின்றன.<ref>{{Cite book|title=The secret history of the mongol queens : how the daughters of Genghis Khan rescued his empire|last=Weatherford, Jack.|year=2011|isbn=9780307407160|pages=92|oclc=915759962}}</ref>
 
ஒக்தாயியின் [[குடிப்பழக்கம்|குடிப் பழக்கமானது]] அனைவராலும் பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். அவரது இப்பழக்கத்தைக் கவனித்துக்கொள்வதற்காக ஓர் அதிகாரியைச் சகதாயி நியமித்தார். இருந்தபோதிலும் ஒக்தாயி எவ்வாறாவது குடித்தார். ஒரு நாளைக்குத் தான் குடிக்கும் கோப்பைகளின் எண்ணிக்கையைக் குறைப்பேன் என்று ஒக்தாயி சபதம் எடுத்ததாகவும், பிறகு தான் பயன்படுத்திய கோப்பையின் அளவை இருமடங்காக அதிகமாக்கிக் குடித்ததாகவும் பொதுவாகக் கூறப்படுவதுண்டு. 11 திசம்பர் 1241ஆம் ஆண்டின் அதிகாலையில் அப்துர் ரகுமானுடன் ஒரு பிந்தைய இரவுக் குடியின் போது ஒக்தாயி இறந்தபோது, டொலுயின் விதவையின் சகோதரி மற்றும் அப்துர் ரகுமான் மீது மக்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால் ககானின் சொந்த சுய கட்டுப்பாடு இல்லாத தன்மையே அவரைக் கொன்றது என மங்கோலிய உயர்குடியினர் பிறகு அறிந்தனர்.
 
ஒக்தாயி ஒரு அடக்கமான மனிதர் என்பது அறியப்பட்ட ஒன்றாகும். தன்னை ஒரு மேதையாக அவர் நினைக்கவில்லை. தனது தந்தை தனக்கு விட்டுச் சென்ற சிறந்த தளபதிகள் மற்றும் தன்னைச் சுற்றியிருந்த தகுதி வாய்ந்த நபர்களின் அறிவுரைகளைக் கேட்டு, அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். இவர் ஒரு பேரரசராக இருந்தார், ஆனால் சர்வாதிகாரி கிடையாது.<ref>David Morgan ''The Mongols'', p. 104.</ref> அந்நேரத்தில் இருந்த அனைத்து மங்கோலியர்களைப் போலவே, குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு போர் வீரனாகுவதற்காக இவர் வளர்க்கப்பட்டுப் பயிற்றுவிக்கப்பட்டார். செங்கிஸ் கானின் மகனாக ஒரே உலகப் பேரரசை நிறுவுவதற்கான தனது தந்தையின் திட்டத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்டார். இவர் தன் தந்தையைப் போலவே நடைமுறையை அறிந்த ஒரு மனிதன் ஆவார். ஒரு செயலைச் செய்யும் வழிகளைத் தவிர்த்து அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியே இவர் கவனித்தார். இவரது நிலையான இயற்பண்பு மற்றும் மற்றவர்கள் இவர் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய தன்மை ஆகிய குணங்களை இவரது தந்தை மிகவும் மதித்தார். இப்பண்புகள் காரணமாகவே தனக்கு இரு அண்ணன்கள் இருந்தபோதிலும் தனது தந்தைக்கு அடுத்த ஆட்சியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது