ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 136:
 
இச்செயலையும், இந்தக் குற்றத்தை மங்கோலிய நூல்கள் விமர்சித்தன என்ற ஆதாரம் இல்லை என்றாலும், அவை உண்மை என்றே (கேள்விக்குரியதான வகையிலே) ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்நிகழ்வானது ஜாக் வெதர்போர்டின் 2011ஆம் ஆண்டு ''மங்கோலிய அரசிகளின் இரகசிய வரலாறு: எவ்வாறு செங்கிஸ் கானின் மகள்கள் அவரது பேரரசை மீட்டெடுத்தனர்'' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெதர்போர்டு, "ஒக்தாயியின் 12 ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடந்த அவர் செய்த மிக மோசமான குற்றம்" என இதைக் குறிப்பிடுகிறார். மங்கோலியர்கள் செய்ததாகப் பதியப்பட்ட அட்டூழியங்களிலேயே மிக மோசமான குற்றங்களில் ஒன்று எனவும் குறிப்பிடுகிறார். மங்கோலிய வரலாற்றை பற்றி அன்னே எஃப். பிராட்பிரிட்ஜ் எழுதி அதற்குப் பிறகு வெளிவந்த "பெண்கள் மற்றும் மங்கோலியப் பேரரசின் உருவாக்கம்" (2018) என்ற நூலில் "இழிந்தது எனப் பெயரெடுத்த ஒயிரட் பெண்களின் மொத்தக் கற்பழிப்பு எனக் குற்றம்சாட்டப்படுவதை" ஒக்தாயி தன் சித்தப்பா தெமுகே ஒச்சிகனின் அனுமதி இல்லாமல் தெமுகேயின் நிலப்பரப்புகளில் இருந்து அலுவல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒக்தாயி பெண்களை எடுத்துக் கொண்டதுடன் தொடர்புப்படுத்துகிறார். எனினும், பிராட்பிரிட்ஜ் குறிப்பிடுவது யாதெனில், "அனைத்து ஆதாரங்களும் வன்முறை கொண்டு ஒடுக்கப்பட்டதைக் காணும்போது இந்நிகழ்வு உண்மையாகவே நிகழ்ந்திருக்கவேண்டும் எனவே கருதப்பட வேண்டியுள்ளது".<ref name="Cambridge University Press">{{cite book |last1=Broadbridge |first1=Anne F. |title=Women and the Making of the Mongol Empire |date=2018 |publisher=Cambridge University Press |location=United Kingdom |isbn=978-1-108-42489-9 |page=187}}</ref> யுவான் வரலாறு அல்லது யுவான்சி (பத்தி 2, 35) மற்றும் மங்கோலியர்களின் இரகசிய வரலாறு (பத்தி 281) ஆகியவை "இடது இறக்கை" மற்றும் "சித்தப்பா ஒச்சிகனின் நிலப்பரப்பு" ஆகியவற்றிலிருந்து முறையே கட்டாயப்படுத்திப் பெண்களைப் பெற்றது பற்றிப் கூறுகின்றன. ஆனால் அவை கற்பழிப்புப் பற்றிக் குறிப்பிடவில்லை (இகோர் டி ரேச்சல்வில்ட்சு 2004).<ref name="Brill's Inner Asian Library">{{cite book |last1=De Rachewiltz |first1=Igor |title=The Secret History of the Mongols, A Mongolian Chronicle of the Thirteenth Century, Translated with a Historical and Philological Commentary, Volume One |publisher=Brill's Inner Asian Library |location=Brill Leiden Boston |pages=1032–1035}}</ref> இரகசிய வரலாறானது ஒக்தாயி தன் செயலுக்காக வருத்தம் தெரிவித்ததைக் குறிப்பிடுகிறது: "எனது இரண்டாவது தவறு யாதெனில், ஒழுக்கமற்ற பெண்ணின் வார்த்தைகளைக் கேட்பது மற்றும் என் சித்தப்பா ஒச்சிகனின் நிலப்பரப்பிலிருந்து பெண்களைக் கொண்டு வந்தது ஆகியவை சந்தேகத்துக்கிடமின்றி தவறுகளாகும்". ஆனால் இகோர் டி ரேச்சல்வில்ட்சு என்ற வரலாற்றாளர், நான்கு நல்ல செயல்கள் மற்றும் நான்கு தவறுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஒட்டுமொத்த பத்தியும் ஒக்தாயி இறந்த பிறகு கருதப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார் (இகோர் டி ரேச்சல்வில்ட்சு 2004).<ref name="Brill's Inner Asian Library"/>
 
இந்நிகழ்வு நடந்ததாக குற்றம் சாட்டும் ஓர் இடமானது 1252ஆம் ஆண்டு [[அடா-மாலிக் ஜுவய்னி|சுவய்னி]] (1226-1283) எழுதிய [[தரிக்-இ ஜகான்குசாய்]] (உலகத் துரந்தரரின் வரலாறு) என்ற நூலில் 32வது அத்தியாயத்தில் காணப்படுகிறது.<ref>{{cite book |last1=Boyle |first1=John Andrew |title=The History of the World Conqueror by Ala-ad-din Ata-Malik JUVAINI, Translated from the text of Mirza Muhammad Qazvini |date=1958 |publisher=Harvard University Press |location=Cambridge Massachusetts |page=201}}</ref> இந்த மொத்த அத்தியாயமும் பிறகு 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [[ரசீத்தல்தீன் அமாதனி|ரசீத்தல்தீனால்]] எழுதப்பட்ட [[ஜமி அல்-தவரிக்]] நூலில் அப்படியே சிறிது மாற்றம் செய்த பிறகு இணைக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் 32இல் சுவய்னி ஒக்தாயியைப் புகழ்வதுடன் தொடங்குகிறார். ஒக்தாயி கானின் "கருணை, மன்னிக்கும் பண்பு, நீதி மற்றும் ஈகைக் குணத்தை" விளக்குவதற்காக 50 அதிக விளக்கங்களுடன் கூடிய துணுக்குகளை அவர் கொடுக்கிறார். பிறகு ஒரு துணுக்கில் ஒக்தாயியின் "வன் நடத்தை, வருத்தும் தன்மை, சீற்றம் மற்றும் பிறர் போற்றும் தன்மை" ஆகியவற்றை விளக்குகிறார். இப்பகுதியில்தான் இந்தக் கற்பழிப்பு நிகழ்வைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துணுக்குடன் இந்த அத்தியாயம் முடிவடைகிறது. இச்செயலுக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடியினத்தின் பெயரானது சுவய்னியின் நூலின் இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் தெளிவற்று உள்ளது. ஆனால் ரசீத்தல்தீனின் நூலின் கையெழுத்துப் பிரதியில் இந்தப் பழங்குடியினத்தின் பெயர் ஒயிரட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிராட்பிரிட்ஜ் மற்றும் டி ரேச்சல்வில்ட்சு ஆகியோர் இந்தப் பழங்குடியினம் ஒயிரட்டு தான் என்று குறிப்பிடப்படுவதன் உண்மைத்தன்மையின் துல்லியத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர்.<ref name="Cambridge University Press" /><ref name="Brill's Inner Asian Library" /> இந்தத் துணுக்குகள் பாரசீகக் கதையின் பாணியில் எழுதப்பட்டுள்ளன. சுவய்னி தனது 46வது துணுக்கின் ஆதாரமாகக் குறிப்பிடுவது, "இந்தக் கதையை எனது நண்பர்களில் ஒருவனின் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டேன்" என்பதாகும்.<ref>{{cite book |last1=Boyle |first1=John Andrew |title=The History of the World Conqueror by Ala-ad-din Ata-Malik JUVAINI, Translated from the text of Mirza Muhammad Qazvini |date=1958 |publisher=Harvard University Press |location=Cambridge Massachusetts |page=228}}</ref> ஒக்தாயியைப் புகழும் துணுக்குகள் முஸ்லிம் சார்பாகவும், சீனர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் தெளிவாகக் கொண்டுள்ளன. ஒக்தாயியின் சுய கட்டுப்பாடு இல்லாத தன்மையை இகழும் பாணியில் சில துணுக்குகள் காணப்படுகின்றன. சில துணுக்குகள் உண்மைத் தன்மையைக் கொண்டிருப்பதாகக் கருத வேண்டியிருந்தாலும், மற்ற சில துணுக்குகள் முஸ்லிம் வணிகச் சமூகத்தின் வதந்திக் கதைகளில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அத்துணுக்குகளைக் கவனத்துடன் அணுக வேண்டியுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. மற்றொரு பாரசீக நூலானது, சின் அரசமரபின் போர் வீரர்கள், "மங்கோலியர்களை நோக்கிக் கிண்டல் செய்ததற்காகவும்", "தீய எண்ணங்களை" வெளிப்படுத்தியதற்காகவும் மொத்தமாகக் கற்பழிக்கப்பட்டனர் என்று குறிப்பிடுகிறது. இது ரசீத்தல்தீனாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெதர்போர்டும் இதைப் பற்றித் தனது நூலில் எழுதியுள்ளார். எனினும் இந்த நிகழ்வானது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனக் கருதப்படுகிறது. இது கற்பழிப்பு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிடுகிறது.<ref name=":0">{{Cite book|title=The secret history of the mongol queens : how the daughters of Genghis Khan rescued his empire|last=Weatherford, Jack.|year=2011|isbn=9780307407160|pages=90–91|oclc=915759962}}</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது