ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 144:
தரிக்-இ ஜஹான்குஷாய் நூலானது, ஒக்தாயியின் சிங்கம் போன்ற வேட்டை நாய்கள், ஒக்தாயி காப்பாற்றி விடுவித்த ஓர் ஓநாயைத் துரத்தித் துண்டங்களாகக் கடித்துக் குதறின. அதற்குப் பிறகு ஒக்தாயி இறந்தார். ஓர் உயிருள்ள உயிரினத்தை விடுவித்தால் தனக்குண்டான வயிற்று உபாதையிலிருந்து கடவுள் விடுவிப்பார் என்று ஒக்தாயி நம்பினார். இந்தத் துணுக்கு 47வது துணுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அப்துர் ரகுமானுடன் நள்ளிரவுக்குப் பிந்தைய குடி விருந்தில் ஒக்தாயி இறந்ததிலிருந்து மாறுபடுகிறது.
 
1230களின் ஆரம்ப காலத்தில் தனது மகன் கூச்சுவைத் தன் வாரிசாக ஒக்தாயி நியமித்தார். 1236ஆம் ஆண்டு கூச்சுவின் இறப்பிற்குப் பிறகு தனது பேரன் ஷிரேமுனைத்சிரேமுனைத் தனது வாரிசாக நியமித்தார். இவரது தேர்வானது மங்கோலியர்களிடையே ஒத்துப் போகவில்லை.<ref>{{cite book |last1=Craughwell |first1=Thomas J. |title=The Rise and Fall of the Second Largest Empire in History: How Genghis Khan's Mongols Almost Conquered the World |date=1 February 2010 |publisher=Fair Winds Press |isbn=978-1-61673-851-8 |page=208 |url=https://books.google.com/books?id=ROijKBT6CMIC&dq=kuchu&pg=PA208 |language=en}}</ref> ஒக்தாயியின் இறப்பிற்குப் பிறகு அவரது விதவை [[தோரேசின் கதுன்]] ஐந்து ஆண்டுகளுக்குப் பிரதிநிதியாகப் பேரரசைக் கவனித்துக் கொண்டார். அதற்குப் பிறகு இறுதியாகல் குயுக் ஆட்சிக்கு வந்தார். எனினும் [[தங்க நாடோடிக் கூட்டம்|தங்க நாடோடிக் கூட்டத்தின்]] கானாகிய படு குயுக்கைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டார். படுவை எதிர்கொள்வதற்காகப் பயணித்தபோது செல்லும் வழியிலேயே குயுக் உயிரிழந்தார். 1255ஆம் ஆண்டு வரை, [[மோங்கே கான்]] ஆட்சிக்கு வந்த பிறகு, ஐரோப்பா மீது படையெடுக்க ஆயத்தமாகப் பாதுகாப்பான சூழ்நிலையைப் படு உணர்ந்தார். ஆனால் அத்திட்டம் செயல்படுத்தப்படும் முன்னரே படு இறந்தார்.
 
1271ஆம் ஆண்டு [[குப்லாய் கான்]] [[யுவான் அரசமரபு|யுவான் அரசமரபை]] நிறுவிய போது, அலுவல் பதிவுகளில் ஒக்தாயி கானைத் தைசோங் என்ற பெயருடன் குறிப்பிட்டார்.
 
== மனைவிகளும், குழந்தைகளும் ==
இவரது தந்தை செங்கிஸ் கானைப் போலவே, ஒக்தாயியிக்கும் பல மனைவிகளும், 60 துணைவிகளும் இருந்தனர்.<ref>{{Cite book|last=Rashīd al-Dīn Ṭabīb, 1247-1318.|title=The successors of Genghis Khan.|date=1971|publisher=Columbia University Press|isbn=0-231-03351-6|location=New York|pages=620|oclc=160563}}</ref> ஒக்தாயி முதலில் போரக்சினை மணந்தார். பிறகு [[தோரேசின் கதுன்|தோரேசினை]] மணந்தார். மற்ற மனைவிகள் மோகே கதுன் மற்றும் சச்சின் கதுன் ஆகியோர் ஆவர். இதில் மோகே கதுன் செங்கிஸ் கானின் முன்னாள் துணைவி ஆவார்.
 
முதன்மை மனைவிகள்:
 
# போரக்சின்
# [[தோரேசின் கதுன்|தோரேசின்]]
## [[குயுக் கான்|குயுக்]] - மங்கோலியர்களின் 3வது பெரிய கான்
## கோதென் - முதல் பௌத்த மங்கோலிய இளவரசன்
## கோச்சு (இறப்பு 1237) - [[சாங் அரசமரபு மீதான மங்கோலியப் படையெடுப்பு|சாங் சீனப் படையெடுப்பின்போது]]
### சிரேமுன் - ஒக்தாயியால் வாரிசாக நியமிக்கப்பட்டவர்.
### போலத்சி
### சோசே
## கரச்சர்
### தோதக்
## காசி - ஒக்தாயியின் ஆட்சியின் போது இறந்தார்.
### [[கய்டு]] (1235–1301)
# மோகே கதுன்
# கோருகேன்
 
துணைவியர்:
 
# எர்கேன்
## [[கதான்]]
# தெரியாத துணைவி
## மெலிக் - தனிசுமந்து அஜிப்பால் வளர்க்கப்பட்டவர்.
==மேலும் காண்க==
* [[குப்லாய் கான்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது