அழகு முத்துக்கோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Corrected story
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
 
== ஆங்கிலேயர்களுக்கு எதிராக ==
கோனார் சமூகம் என்னற்ற போர் வீரர்களையும், பாண்டிய மன்னர்களையும் தன் தாய் மண்ணிற்கு தந்துள்ளது. அழகுமுத்துக்கோன் தலைமுறையினர் அரசர்களாகவும் பலம் வாய்ந்த போர் வீரர்களாகவும் திகழ்ந்தனர். இவர்கள் கூறுகின்ற வார்த்தைகளுக்கு சுற்றி உள்ள பாளையங்கள் கட்டுப்பட்டன. தென் தமிழகத்தில் மதுரையை மையமாக வைத்து 72 பாளையங்கள் உள்ளன. அதில் மிகப்பெரிய ஆட்சிகளை கொண்டிருக்கும் இரண்டு பாளையமான பாஞ்சாலங்குறிச்சி மற்றும் எட்டயபுரம் பகுதிகளை கைப்பற்றி விட்டால் மற்ற பகுதிகளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று எண்ணினர் ஆங்கிலேயர்கள். எட்டையபுரம் பாளையம் சுற்றி உள்ள பகுதிகளை வரி வசூலிக்க முடிவு செய்துசெய்த ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களை வரி செலுத்துமாறு எச்சரிக்கை செய்தனர் இதனை அழகுமுத்துக்கோன் முதன் முதலில் எதிர்த்து பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த கூடாது என கட்டளையிட்டார். இதன்படி எட்டயபுரம் மன்னரான ஜெகவீரராம எட்டப்பரும் அதே காலகட்டத்தில் வாழ்ந்த நெற்கட்டான் செவ்வல் பாளையம் பகுதியில் புலித்தேவனும் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்துவிட்டனர். இதனால் பாளையக்காரர்களான அழகுமுத்துக்கோன் மற்றும் பூலித்தேவன் இடையே நட்பு உருவாகிறதுஉருவானது .பாளையக்காரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட வேண்டும் என்று சுற்றி உள்ள பாளையங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அனைத்து பாளையக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அழகுமுத்துக்கோன் திட்டமிட்டபடி ஒரு சில பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தவில்லை. அழகுமுத்துக்கோன் தன்னை எதிர்த்து பாளையக்காரர்களை திரட்டுவது ஆங்கிலேயர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி அழகுமுத்துக்கோன் காட்டில் போர்வீரர்களை தயார் செய்து கொண்டிருக்கும் போது மேற்கே ஆங்கிலேய படையை எதிர்க்க பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் உதவியை நாடியதால் அழகுமுத்துக்கோன் படையும் பூலித்தேவனுக்கு உதவி பல போர்களை நிகழ்த்தி வெற்றி கண்டது. மேலும் தங்களது படையில் திருவிதாங்கூர் படையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சேர்ந்து கொண்டது. அதில் கர்னல் எரோன் கெரான் மற்றும் மாபூஸ்கானை அடுத்தடுத்து வென்றனர். ஆங்கிலேயர்களை எதிர்த்தது மற்றும் பூலித்தேவனுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை தோற்கடித்தது போன்ற காரணங்கள் ஆங்கிலேயர்களுக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியது இதனால் அழகுமுத்துக்கோன் போன்று இனி யாரும் தங்களை எதிர்க்க கூடாது என்பதற்காக பீரங்கியால் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தார். முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், [[பாளையக்காரர்கள்]] ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் [[மருதநாயகம்]] பிள்ளை ([[மருதநாயகம்|முகம்மது யூசுப் கானை]]) அனுப்பி வைத்தது. வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு [[பீரங்கி]] முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.<ref name=Madhan>{{Cite book|last=Kumar|first=Madhan|url=https://books.google.com/books?id=XJ8rDwAAQBAJ&pg=PA113|title=Thamizh Is Not Just A Language: The Valour|date=2017|publisher=Educreation Publishing|isbn=978-1-5457-0304-5|location=New Delhi|pages=113|language=en}}</ref>
<ref name=thehindu>{{Cite news|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/tributes-paid-to-alagumuthu-kone/article7412824.ece|title=Tributes paid to Alagumuthu Kone|date=12 July 2015|work=The Hindu|access-date=11 April 2020|language=en-IN|issn=0971-751X}}</ref>எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
"https://ta.wikipedia.org/wiki/அழகு_முத்துக்கோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது