கருஞ்சீரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
'''கருஞ்சீரகம்''' (''Nigella sativa'') தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.
 
"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது '''[https://www.ethanthi.com/2017/06/what-happens-in-our-body-if-you-drink.html கருஞ்சீரகம்]'''" என்று [[இசுலாம்]] மதத்தின் தூதர் [[முகமது நபி|நபிகள் நாயகம்]] அவர்களது வாக்காகக் கருதப்படுகிறது. [[யுனானி]] மருத்துவத்தில், இன்றளவும் இதன் எண்ணெயை பயன்படுத்தப்படுகின்றனர். மேலும் அரபு நாடுகளிலும் இதனை உணவுடன் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர்.
 
[[பைபிள்|பைபிளிலும்]] இதனை பற்றி குறிப்பிடபட்டுள்ளது.
வரிசை 26:
இதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியதாக நம்பப்படுகிறது. கருஞ்சீரகத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
'''[https://www.esamayal.com/2015/12/blog-post_65.html கருஞ்சீரகம்]''' சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.
 
[[பகுப்பு:மூலிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கருஞ்சீரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது