நீர்நில வாழ்வன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
மிகப் பழைய தொடக்கநிலை இருவாழிகள் நுரையீரலும் என்புமுள்ளால் ஆன துடுப்பும் அமைந்த இதழ்த்துடுப்பு மீன்களில் இருந்து தோன்றிப் படிமலர்ந்தனவாகும். இந்தக் கூறுபாடுகள் நில வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புக்கு உதவின. இருவாழிகள் கரியூழிக் காலத்திலும் பெர்மியக் காலத்திலும் பல்கிப் பெருகி உலகெங்கும் ஓங்கலான வீச்சுடன் வாழ்ந்தன; ஆனால், பின்னர் இவை ஊர்வனவற்றாலும் முதுகெலும்பிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. கால அடைவில், இருவாழிகள் அளவில் சுருங்கி, பன்முக வளர்ச்சியையும் இழந்தன. இப்போது இலிசாம்பிபியா உள்வகுப்பு சார்ந்த இருவாழிகள் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளன.
 
புத்தியல்கால இருவாழிகள் மூன்று வரிசைகளில் அடங்குகின்றன; அவை தவளைகளும் தலைப்பிரட்டைகளும் அடங்கிய அனுரா வரிசை, சலமாண்டர்கள் அடங்கிய உரோடெலா வரிசை குருட்டுப்புழுக்கள் அடங்கிய அப்போடா வரிசை என்பனவாகும். இருவாழ்விகளில் தோராயமாக 7,000 இனங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தவளை இனங்கள் மட்டுமே 90% அளவுக்கு அமைந்துள்ளன. உலகிலேயே மிகச் சிறிய இருவாழியும் முதுகெலும்பியுமான ''பயெடோபிரிய்னே அமுவென்சிசு'' (''Paedophryne amauensis'') எனும் தவளை இனம் நியூகினியாவில் வாழ்கிறது. இதன் நீளம் 7.7 மிமீ ஆகும். மிக நீண்ட வாழும் இருவாழ்வியாக ''ஆந்திரியாசு தேவிதியானசு (Andrias davidianus'') எனும் சீனப் பெருஞ்சலமாண்டர் அமைகிறது. இதன் நீளம் 1.8 மீ ஆகும். இதுவும் 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட ''பிரியோனோசச்சசு'' (''Prionosuchus'') எனும் பிரேசில் நாட்டில் இடைநிலைப் பெர்மியக் காலத்தில் வாழ்ந்த இருவாழியின் குறுவடிவமே ஆகும்.
 
இருவாழிகளின் உடல், தலை, உடம்பு எனும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை வழுவழுப்பான ஈரமான தோலைக் கொண்டிருக்கும். இவற்றின் [[இதயம்]] மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நீர்நில_வாழ்வன" இலிருந்து மீள்விக்கப்பட்டது