நுண்நோக்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
மனித வெற்றுக் கண்களால் பார்க்க முடியாத நுண்பொருட்கள், அமைப்புகள் மற்றும் விபரங்களை, [[நுண்நோக்கி]] மற்றும் வேறு உருப்பெருக்கும் கருவிகள் மூலம் கட்புலனாகக்கூடிய படிமங்களாக உருவாக்கும் நுட்பமே '''நுண்நோக்கியல்''' ஆகும். ஒளிசார் நுண்நோக்கியலில், எடுத்துக்கொண்ட பொருளினூடாகச் செல்கின்ற அல்லது அதிலிருந்து தெறித்து வருகின்ற [[ஒளி|ஒளியைப்]] பல கண்ணாடி [[வில்லை (ஒளியியல்)|வில்லைகளின்]] ஊடாகச் செலுத்துவதன் மூலம் உருப்பெருக்கிய விம்பம் பெறப்படுகிறது. இதை நேரடியாகக் கண்ணால் பார்க்கவோ அல்லது நிழற்படத் தகடுகள்மீது படமாகப் பதிக்கவோ முடியும். உருப்பெருக்குதிறன் ஒளியின் அலைநீளத்தில் தங்கியுள்ளது அறியப்பட்ட பின்னர், குறைந்த அலைநீளம் கொண்ட [[இலத்திரன்] கற்றைகளைப் பயன்படுத்தும் [[இலத்திரன் நுண்நோக்கி|இலத்திரன் நுண்நோக்கிகள்]] உருவாக்கப்பட்டன. இதன்மூலம் மிக உயர்ந்த உருப்பெருக்கத்தைப் பெறமுடிந்தது. 1940 ஆம் ஆண்டிற்குப் பின்னர் [[எக்ஸ் கதிர்]] நுண்நோக்கிகளும் விருத்தி செய்யப்பட்டன எனினும், இவை அதிகம் பயன்பாட்டில் இல்லை.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நுண்நோக்கியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது