சிவகாமியின் சபதம் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 54:
ஏழு மாதங்கள் கழிந்த பின்பு பரஞ்சோதியார் மகேந்திரவர்மரின் நன்மதிப்பை பெற்ற ஓர் சிறந்த படைத் தலைவனாக இருக்கிறார். சாளுக்யருடன் போர் நெருங்கிவரும் இவ்வேளையில் பரஞ்சோதியார் நாடு திரும்பி காஞ்சியில் இளவரசர் நரசிம்மருடன் மிகவும் நட்புடன் இருந்தார். தன் காதலியைச் சந்திக்காமல் நரசிம்மர் படும் வேதனைக்குப், பரஞ்சோதியாரின் நட்பு மருந்தாக இருந்தது. இவ் இக்கட்டான நிலையில் பல்லவ படையின் தலைமை ஒற்றனான சத்ருக்னன் இடமிருந்து, காஞ்சி மீது படையெடுக்க எத்தனித்த துர்வநீதன் என்னும் சிற்றரசன் மீது போர்தொடுக்கும்படி மகேந்திர பல்லவரின் அரசாணை வந்து சேர்ந்தது. சிவகாமியிடம் சோழ பாண்டிய நாடுகளில் நடனமாடும் பெரிய வாய்ப்பு ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறிய நாகநந்தி அவள் நல்மதிப்பைப் பெற்றான். போரைப் பற்றி எதுவும் அறியாத ஆயனாரிடம் நடக்க இருக்கும் விபரீதத்தினை எடுத்துரைத்த நாகநந்தி அவர்களைப் புத்த விகாரம் ஒன்றில் தங்க வைத்தான். அங்கிருந்து துர்வீந்தன் மீது நரசிம்ம பல்லவர் படையெடுத்து செல்வதைக் கண்ட சிவகாமி அவரிடம் செல்ல நினைக்க, அக்கணம் வஞ்சக எண்ணம் கொண்ட நாகநந்தியால் உடைக்கப்பட்ட ஏரியினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாள். இதைக் கண்ட நரசிம்மர் அவளையும் ஆயனாரையும் பத்திரமாக மீட்கிறார்.
 
===பகுதி 3:பிக்ஷுவின்பிட்சுவின் காதல்===
காஞ்சியின் மதில் சுவரை உடைத்து எறிய நினைத்து அங்கு வந்த புலிகேசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காஞ்சி அவ்வளவு வலிமையுடன் இருந்தது. இதனால் மனம் தளராத புலிகேசி கோட்டையின் வெளியிலே தண்டு இறங்கி பாசறை அமைத்து தங்கினான். உணவு தட்டுப்பாட்டின் காரணமாகக் காஞ்சி விரைவில் வீழும் என்று நினைத்தான் புலிகேசி. ஆனால் அவன் கூற்றைப் பொய்யாக்கும்படி காஞ்சியிடம் தேவைக்கு அதிகமாகவே உணவு இருப்பு இருந்தது. அதற்கு நேர் மாறாகச் சாளுக்ய படையிடம் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக யானைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக மாறியது.
 
தோல்வியை ஏற்க விரும்பாத புலிகேசி அமைதி தூது விடுத்துக் காத்திருந்தான். இதை சிறிதும் நம்பாத மன்னர் மகேந்திர பல்லவர், நரசிம்மரைத் தெற்கே சென்று பாண்டியனிடம் போர்புரிய அனுப்பிவிட்டுப் பின்பு புலிகேசியை அரண்மனைக்கு அழைத்தார். ராஜஉபசரிப்பையும்இராச உபசரிப்பையும், விருந்தோம்பலையும் நன்கு அனுபவித்தான். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க மண்டபப்பட்டிலிருந்து வந்த சிவகாமி தன் நாட்டிய விருந்தால் புலிகேசியை மகிழ்வித்தால். அவளும் அவள் தந்தையும் கோட்டை வாயில் திறக்கும் வரை காஞ்சியிலே தங்கி இருந்தனர். புலிகேசி விடைபெறுமுன் வஜ்ரபாஹுவாய்வச்சிரபாகுவாய் வந்தது தாமே என்ற உண்மையை மகேந்திரர் போட்டுடைத்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைக் காட்டிக்கொள்ளாத புலிகேசி காஞ்சியை விட்டு வெளியேறிய பின்பு தன் படை வீரர்களிடம் கண்ணில் தென்படும் அனைத்தையும் அழிக்குமாறு உத்தரவிட்டான். மற்றும் மகேந்திரவர்மரின் கலைஞர்களின் கரங்களைத் துண்டிக்கவும் ஆணையிட்டான்.
 
நடக்கப்போகும் விபரீதமறியா ஆயனார், சிவகாமியுடன் சுரங்கம் ஒன்றின் வழியாகக் காஞ்சியை விட்டு வெளியேறி புலிகேசியிடம் மாட்டிக்கொண்டார். புலிகேசியைப் போல் வேடம் புனைந்த நாகநந்தி ஆயநாரை மட்டும் காவலர்களிடமிருந்து மீட்டான் (இவ்விடம் புலிகேசியும் நாகநந்தியும் இரட்டை சகோதரர்கள் என்பதை தெரியபடுத்திக் கொள்கிறார்கள்). புலிகேசியுடன் எதிர்கொண்ட போரில் மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். மரணப்படுக்கையில் அவர் சாளுக்ய மன்னனுடன் அமைதி உடன்பாடு கொண்டதின் தவற்றை உணர்ந்தார். இக்களங்கத்தைப் போக்க நரசிம்மப் பல்லவரை சாளுக்ய நாடு சென்று சிவகாமியைப் புலிகேசியின் பிடியிலிருந்து மீட்டுவரும்படி கூறுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சிவகாமியின்_சபதம்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது