சேந்தன் அமுதன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
தமிழில் கிரந்தம் தவிர்த்தோம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 55:
சேந்தன் அமுதன் குதிரை மீதிருந்து கீழே விழுந்த படியால் உடல்நலமின்றி இருக்கிறார். அவருடைய அன்பினை கண்ட பூங்குழலி சக்கரவர்த்தினியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தினை மாற்றிக் கொண்டு சேந்தன் அமுதனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றாள். அந்நேரத்திற்கு செம்பியன் மாதேவியும், வாணி அம்மையும் வருகின்றார்கள். அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்கள் சேந்தன் அமுதன் - பூங்குழலி இணையர். சிறிது நேரத்திற்கு பிறகு குடிசைக்கு வெளியேயிருந்து பினாகபாணி வேலினை சேந்தன் அமுதன் மீது பாய்ச்ச பார்க்கிறான். அதனை வந்தியத்தேவன் தடுக்க முற்படும்போது, காயமுறுகிறார். அவரை சேந்தன் அமுதனும், பூங்குழலியும் காப்பாற்ற முற்படுகின்றார்கள். அங்கே திருமலையப்பன் வந்து வந்தியத்தேவனை அரண்மனைக்கு அழைத்து செல்ல சேந்தன் அமுதனை இளவரசராக நடிக்க வைக்கிறார்.
 
தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழரிடம் தன் மகனைக் காணவில்லையென செம்பியன் மாதேவி கவலை தெரிவிக்கின்றார். அவரைத் தான் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறி, சேந்தன் அமுதனை அழைத்துவருகிறார் முதன் மந்திரி அநிருத்தர். சேந்தன் அமுதனைக் கண்ட செம்பியன் மாதேவி அன்புப்பெருக்குடன் மகனே என்று அழைக்கின்றார். இதற்காகவே தான் இங்கு வந்ததாகவும், ராஜ்ஜியத்தில்அரசாட்சியில் உரிமை வேண்டாம் எனவும் சேந்தன் அமுதன் கூறுகிறார். தான் சோழ இளவரசர் என்று தெரிந்திருந்தும் பூங்குழலியை அரசாள்பவனையே திருமணம் செய்வேன் என்ற கொள்கையிலிருந்து மாற்றி சிவபெருமானுக்கு தொண்டு செய்ய சம்மதிக்க வைத்ததாகவும் கூறுகிறார். அவருடைய சிவபக்தியை கண்டு சிவஞான கண்டராதித்தருக்கு பிறந்த பிள்ளை இதுவென அவையில் உள்ளோர் அனைவரும் முடிவு செய்கிறார்கள்.
 
[[கண்டராதித்தர் (கதைமாந்தர்)|கண்டராதித்தனாருக்கும்]], அவருடைய துணைவியார் [[செம்பியன் மாதேவி (கதைமாந்தர்)|செம்பியன்மாதேவிக்கும்]] பிறந்த பிள்ளைதான் சேந்தன் அமுதன் என்ற உண்மை தெரியவருகிறது. [[அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)|அருள்மொழிவர்மனுக்கு]] மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு, விழா எடுக்கிறார்கள். ஆனால் அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டுபோய் கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று அறிவிக்கிறார். சேந்தன் அமுதனே உத்தம சோழனாக ஆட்சி செய்ததாக புதினம் விளக்குகிறது.<ref>{{Cite web |url=http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan |title=பொன்னியின் செல்வன் . வைகோ திறனாய்வு |access-date=2012-09-25 |archive-date=2012-09-14 |archive-url=https://web.archive.org/web/20120914015352/http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan |dead-url=dead }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சேந்தன்_அமுதன்_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது