மான்டேகு இல்லம், இலண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
[[Image:The North Prospect of Mountague House JamesSimonc1715.jpg|thumb|மாண்டேகு இல்லத்தின் முன்பக்கம்.]]
[[Image:Montagu House, drawing by Sutton Nichols (published 1754).JPG|thumb|வாயிற்பக்கம்.]]
[[Image:Pouget, Pierre Montagu 1709.jpg|thumb|மாண்டேகு இல்லத்தின் தளப்படம்.]]
'''மான்டேகு இல்லம்''' (Montagu House) [[இலண்டன்]] மாநகரின் [[புளூம்சுபரி]]ப் பகுதியிலுள்ள [[கிரேட் ரசல் சாலை]]யில் அமைந்திருந்த 17 ஆம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்த ஒரு மாளிகை ஆகும். இதிலேயே [[பிரித்தானிய அருங்காட்சியகம்]] முதன் முதலில் தொடங்கப்பட்டது. இக்கட்டிடம் இரண்டு முறை கட்டப்பட்டது. இரண்டு முறையும் மான்டேகுவின் முதல் டியூக்கான [[ரால்ஃப் மான்டேகு]] என்பவருக்காகவே அமைக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மாண்டேகு ஒரு நிலத்தை வாங்கினார். இது இன்று இலண்டனின் மத்தியில் இருந்தாலும், அக்காலத்தில் இந்நிலத்தின் பின்பகுதி திறந்த வெளியாகவே இருந்தது. இந் நிலத்தில் மான்டேகுவிற்கான முதல் மாளிகையை ஆங்கில அறிவியலாளரும் கட்டிடக்கலைஞருமான [[ராபர்ட் ஊக்]] (Robert Hooke) என்பவர் வடிவமைத்தார். இவரது கட்டிடக்கலைப் பாணி பிரான்சு நாட்டுத் திட்டமிடலினதும், டச்சு நுணுக்க வேலைப்பாடுகளினதும் செல்வாக்கைக் கொண்டிருந்தது. இம் மாளிகை 1675 ஆம் ஆண்டுக்கும் 1679 ஆம் ஆண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. சமகாலத்தவரால் பெரிதும் பாராட்டப்பட்ட இக் கட்டிடம் 1686 ஆம் ஆண்டில் தீயில் எரிந்த்து போயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/மான்டேகு_இல்லம்,_இலண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது