ஒருங்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:system_tamil.jpg|thumb|right|280px|ஒருங்கியம் ஒன்றும் அதன் சூழகமும். கருத்துப்படம்.]]
'''ஒருங்கியம்''' என்பது ஏதொன்றும் அதன் உறுப்புகளோடு சேர்ந்து, ஒருங்கிணைந்து, முழுவதுமாக சேர்ந்து இயங்கும் ஒன்று. எடுத்துக்காட்டாக [[மனிதன்|மாந்தனின்]] உடல் ஓர் ஒருங்கியம். உடலின் உறுப்புகள் ([[இதயம்]], [[நுரையீரல்]], [[குடல்]], [[கண்]], [[காது]] முதலியன) ஒன்றுடன் ஒன்று பல்வேறு வகைகளில் தொடர்பும் உறவும் கொண்டு உடல் என்னும் ஒன்றை சேர்ந்து இயக்குவதால் (இயங்குவதால்), உடல் ஓர் ஒருங்கியம்.


ஒருங்கியம் என்பது பருப்பொருட்களால் மட்டும் ஆனதாக இல்லாமல், கருத்துப்பொருளாகவும், நுண்புலமாகவும் (abstract) கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக [[எண்]]களும் அவற்றின் இடையே வரையறை செய்த உறவுகளும் (கூட்டல், பெருக்கல் முதலானவை) எல்லாமும் சேர்ந்த ஓர் அறிவுப்பரப்பையும் ஓர் ஒருங்கியம் எனலாம். மேற்பட்டப் படிப்புக்காக ஒரு மாநிலத்தில் அமைக்கப்பட்ட பல பல்கலைக்கழகங்களையும் அவற்றின் இயக்கப்பாடுகளையும் ஒருசேர எண்ணும் பொழுது அவற்றைப் ''பல்கலைக்கழக ஒருங்கியம்'' எனலாம். எனவே ஒருங்கியம் என்பது ஒன்றின் உறுப்புகளும், அவை ஒருங்கிணைந்து இயங்கும் முழுவதுமான ஒன்றும் ஆகும். ஒருங்கியம் என்பதை ''அமைப்பு, அமையம், சமைதியம், முறை, முறைமை'' என்றும் சில சூழல்களில் அழைக்கப்படும்.
 
[[அறிவியல்]], [[பொறியியல்]], [[மருத்துவம்]], [[சமூகவியல்]] (குமுகவியல்) போன்ற பல அறிவுத்துறைகளில் ஒருங்கியம் என்னும் கருத்தும் அதன் பண்புகளும் விரிவாக அலசப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது