இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 1:
[[படிமம்:Tikal mayan ruins 2009.jpg|thumb|இடையமெரிக்காவில் கொலம்பசுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்த மாயன் நாகரிகத் தொல்லியல் களமான [[திக்கல்]]. இது இடையமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொல்லியல் களங்களுள் ஒன்று.|250 px]]
[[படிமம்:ES SanAndres 06 2011 Estructura 1 La Acropolis 2161.jpg|thumb|எல் சல்வடோர் நாட்டில் உள்ள, முன்-இசுப்பானியக் காலத்தைச் சேர்ந்த தொல்லியல் களமான சான் ஆன்டிரெசு.|250 px]]
'''இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி''' அல்லது '''இடை அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி''' அல்லது '''மெசோ-அமெரிக்கா''' (''Mesoamerica'' அல்லது ''Meso-America'') என்பது [[அமெரிக்காக்கள்|அமெரிக்கக்]] கண்டத்தில் உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி ஆகும். இது நடு [[மெக்சிக்கோ]]வில் இருந்து [[பெலீசு]], [[குவாதமாலா]], [[எல் சல்வடோர்]], [[ஒண்டூராசு]], [[நிக்கராகுவா]], [[கொசுத்தாரிக்கா]] ஆகிய நாடுகள் வரை பரந்துள்ளது. 16 ஆம் , 17 ஆம் நூற்றாண்டுகளில் எசுப்பானியக் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன்னர் இப் பகுதியில் பல [[கொலம்பசுக்கு முற்பட்ட காலம்|கொலம்பசுக்கு முற்பட்ட சமுதாயங்கள்]] செழிப்புற வாழ்ந்துள்ளன.<ref>"Meso-America." ''[[Oxford English Dictionary|Oxford English Reference Dictionary]]'', 2nd ed. (rev.) 2002. ({{ISBN|0-19-860652-4}}) Oxford, UK: Oxford University Press; p. 906.</ref><ref>{{Cite web |url=http://highered.mcgraw-hill.com/sites/007299634x/student_view0/glossary.html |title=Glossary<!-- Bot generated title --> |access-date=2011-07-23 |archive-date=2007-09-30 |archive-url=https://web.archive.org/web/20070930185414/http://highered.mcgraw-hill.com/sites/007299634x/student_view0/glossary.html |dead-url-status=dead }}</ref><ref>(2000): Atlas del México Prehispánico. Revista Arqueología mexicana. Número especial 5. Julio de 2000. Raíces/ Instituto Nacional de Antropología e Historia. México.</ref>
 
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இப்பகுதியில், பல வேளாண்மை ஊர்களும், பெரிய, சடங்குசார்ந்த அரசியல்-சமயத் தலைநகரங்களும் இருந்தன. இந்தப்பகுதி, அமெரிக்காக் கண்டத்தின் மிகச் சிக்கலானதும், உயர் முன்னேற்றம் அடைந்ததுமான பல பண்பாடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள், [[ஒல்மெக் நாகரிகம்|ஒல்மெக்]], [[சப்போட்டெக் நாகரிகம்|சப்போட்டெக்]], [[தியோத்திவாக்கன்]], [[மாயா நாகரிகம்|மாயன்]], [[மிக்சுட்டெக் நாகரிகம்|மிக்சுட்டெக்]], [[டோட்டோனாக் நாகரிகம்|டோட்டோனாக்]], [[அசுட்டெக் நாகரிகம்|அசுட்டெக்]] போன்றவை அடங்கும்.<ref>[http://www.allempires.com/article/index.php?q=Meso-American_Civilizations Forgotten Civilizations of Meso-America]</ref>
== சொற்பிறப்பும் வரைவிலக்கணமும் ==
''இடையமெரிக்கா'' என்னும் சொல் ''மெசோஅமெரிக்கா'' ''(Mesoamerica)'' என்னும் [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல். அமெரிக்காவின் ஒரு பகுதியை ஒருங்கே குறிப்பதற்காக, செருமானிய [[இனப்பண்பாட்டியல்|இனப்பண்பாட்டியலாளர்]] [[பால் கெர்ச்சோஃப்]] என்பவர் இச்சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.<ref>{{cite web | title = Mesoamerica: Our Region | work = Mesoamerica | url = http://www.mesoamerica.com/ing_nuestra_region.shtml | accessdate = 2006-12-19 | quote = Paul Kirchhoff coined the term ''Mesoamerica'' in 1943 from the [[Greek language|Greek]] ''[[wikt:meso-|mesos]]'' or "center" and ''[[அமெரிக்காக்கள்|America]]'' from [[Amerigo Vespucci]], who claimed to have discovered the [[continent]] ([[Christopher Columbus]] thought he had reached [[ஆசியா]]). | archive-date = 2006-10-21 | archive-url = https://web.archive.org/web/20061021204507/http://www.mesoamerica.com/ing_nuestra_region.shtml | dead-url -status= dead }}</ref> இன்றைய தென் [[மெக்சிக்கோ]], [[குவாத்தமாலா]], [[பெலீசு]], [[எல் சல்வடோர்]], மேற்கு [[ஒண்டூராசு]], [[நிக்கராகுவா]]வின் பசுபிக் தாழ்நிலப் பகுதிகள், வடமேற்குக் [[கொசுத்தாரிக்கா]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் நிலவிய பல்வேறு [[கொலம்பசுக்கு முந்திய பண்பாடு]]கள் இடையே ஒத்ததன்மைகள் இருப்பதைக் கெர்ச்சோஃப் கவனித்தார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய தொல்லியல் கோட்பாடுகளுக்கு அமையவும், ஏறக்குறைய ஓராயிரம் ஆண்டுகளாக இப்பகுதிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்து இடம்பெற்ற தொடர்புகளினால் ஏற்பட்ட பண்பாட்டு ஒப்புமைகளை அடிப்படையாகக் கொண்டும், இப் பகுதியை அவர் ஒரு [[பண்பாட்டுப் பகுதி]] என வரையறுத்தார்.
 
இப் பண்பாட்டு ஒப்புமைகளுள், நிலையான வாழ்க்கை முறைக்கான மாற்றம், வேளாண்மை, இருவித [[காலக்கணிப்பு முறை]]கள், 20 ஐ அடிப்படையாகக் கொண்ட எண்முறை, [[படவெழுத்து]] முறை, பல்வேறு வகையான பலி கொடுத்தல் செயற்பாடுகள், சிக்கலான பொதுக் கருத்தியல்சார் கருத்துருக்கள் என்பனவும் அடங்கும். இப்பகுதியில் வழங்கும் மொழிகளிடையே உள்ள இலக்கணக் கூறுகளின் ஒப்புமையை அடிப்படையாகக் கொண்டு இது ஒரு [[மொழியியல் பகுதி]] எனவும் காட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது