படைமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''படைமண்டலம்''' (Stratosphere) என்பது புவியின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்த…
 
No edit summary
வரிசை 1:
'''படைமண்டலம்''' (Stratosphere) என்பது புவியின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] மூன்றாவது முக்கியமான அடுக்கு ஆகும். இது [[அடிமண்டலம்|அடிமண்டலத்துக்கு]] மேலும், [[நடுமண்டலம்|நடுமண்டலத்துக்குக்]] கீழும் உள்ளது. படைமண்டலம் [[வெப்பநிலை]] அடிப்படையில் கீழே குளிர்ந்த அடுக்குகளும் மேலே சூடான அடுக்குகளுமாக அமைந்துள்ளது. இது, சூடான அடுக்கு கீழும், குளிர்ந்த அடுக்குகள் மேலேயும் காணப்படும் அடிமண்டல [[அடுக்கமைவு]]க்கு மாறானது. அடிமண்டலத்துக்கும், படைமண்டலத்துக்கும் இடையிலான எல்லையாகிய [[மாறுமண்டல எல்லை]] (tropopause) இந்த மாற்றம் தொடங்கும் இடத்தைக் குறிக்கிறது. [[வளிமண்டல வெப்ப இயக்கவியல்]] அடிப்படையில் இது [[சமநிலை மட்டம்]] ஆகும். இடைத்தர [[நிலநேர்க்கோடு|நிலநேர்க்கோட்டுப்]] பகுதிகளில் படைமண்டலம் 10 [[கிலோமீட்டர்|கிலோமீட்டருக்கும்]] (6 மைல்) 50 கிலோமீட்டருக்கும் (31 மைல்) இடைப்பட்ட உயரத்திலும் கணப்பட, துருவப் பகுதிகளில் இது 8 கிலோமீட்டர் (5 மைல்) உயரத்தில் தொடங்குகிறது.
 
==வெப்பநிலை==
சூரியனிலிருந்து வரும் [[புறவூதாக் கதிர்]]களை உறிஞ்சி வெப்பமாவதால், படைமண்டலம் வெப்பநிலை அடிப்படையில் அடுக்கமைவு பெற்றுள்ளது. மேலிருந்து சூடாவதால், இப்படைமண்டலத்தில் உயரம் கூடும்போது வெப்பநிலையும் கூடுகிறது. இம்மண்டலத்தில் மேல் பகுதியில் வெப்பநிலை ஏறத்தாழ 270 கெல்வின் (&minus;3[[°ச]] or 29.6[[°ப]]) ஆக உள்ளது. இது நீரின் [[உறைநிலை]]க்குச் சற்றுக் குறைவானது.<ref>Seinfeld, J. H., and S. N. Pandis, (2006), Atmospheric Chemistry and Physics: From Air Pollution to Climate Change 2nd ed, Wiley, New Jersey</ref>
 
==குறிப்புக்கள்==
<References/>
 
[[பகுப்பு:வளிமண்டலம்]]
"https://ta.wikipedia.org/wiki/படைமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது