பழவேற்காடு ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Uuuui
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
வரிசை 38:
 
=== நீரியல் ===
பழவேற்காடு ஏரி கடலுக்கும் ஏனைய நீர் ஆதாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியாக விளங்குகிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே [[ஆரணி ஆறு|ஆரணி ஆறும்]] கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஏரியின் மேற்கே [[பக்கிங்காம் கால்வாய்]] நீரும் இங்கே கலக்கிறது. ஏரியின் நீர் வங்காள விரிகுடாவில் மழைக்காலங்களில் மட்டுமே கலக்கிறது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் வட முனையிலும் தென்முனையிலும் இக்கலப்பு நிகழ்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது. <ref>{{Cite web |url=http://www.iisc.ernet.in/currsci/nov252000/1484.pdf |title="Holocene sea-level and climatic fluctuations: Pulicat lagoon – A case study" (pdf). |access-date=2015-08-23 |archive-date=2011-06-07 |archive-url=https://web.archive.org/web/20110607171251/http://www.iisc.ernet.in/currsci/nov252000/1484.pdf |dead-url-status=dead }}</ref>
 
இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது. கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும். இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிர்னங்களின் தன்மையையும் உருவாக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பழவேற்காடு_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது