"விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
விக்கிபீடியாவின் [[விக்கிபீடியா:புது வருனரே,நல்வரவு|புது வருனர்கள்]] [[விதி மீறல்கள்]] ([http://en.wikipedia.org/wiki/faux pasfaux_pas faux pas]) புரிந்துவிட வாய்ப்புகள் அதிகம் என உணரக்கூடும்.தவறொன்றுமில்லை - தவறு செய்யாதார் யாருளர்? பின்வரும் சில பொதுவான பிறழ்வுகளைத் தவிர்க்க முயலவும்:
* '''அகராதி போன்ற கட்டுரைகளைத் தவிர்க்க.''' ''[[விக்கிபீடியா:விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை|விக்கிபீடியா ஒரு அகராதி இல்லை]]''. ஒவ்வொரு கட்டுரையும் வெறும் வரையறைகளைத் தருவதோடு நின்றுவிடாமல் அவை பேச வந்த பொருள் பற்றிய கூடுதல் தகவல்கள் அடங்கியதாகவும் இருக்க வேண்டும்.அகராதி வடிவிலான வரையறைகளுக்காக இன்னொரு விக்கி திட்டமான [http://ta.wiktionary.org விக்சனரி]உள்ளது.
* '''ஒரே பொருளில் பல கட்டுரைகள்.'''ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கும்முன் அந்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை உள்ளதா எனத் தேடிப்பாருங்கள்.புதிதாக ஆரம்பிப்பதைவிட ஏற்கனவே உள்ளதை செழுமைப்படுத்த முடியுமா எனப் பாருங்கள். தலைப்புகள் பொதுவாக ஒருமையில் அமையும் என்பதை நினைவில் கொள்ளவும் (எ-கா:மரம், மரங்கள் இல்லை).விக்கிபீடியாவில் தேடுவதோடு [http://www.google.com கூகிள்]-இலும் "site:ta.wikipedia.org <தலைப்பு>" என்று கொடுத்துத் தேடவும். விக்கிபீடியா தேடலில் விடுபட்டுப்போனவை கூகிள் தேடலில் கிடைக்க வாய்ப்புண்டு (குறிப்பாக நீங்கள் தேடும் சொற்கள் கட்டுரைத் தலைப்புகளில் இடம்பெறாமல் இருக்கும்போது).
* '''விக்கிபீடியா பக்கங்களை அரட்டைக்குப் பயன்படுத்தல்.''' [[விக்கிபீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்#பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி?|பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி?]] பார்க்கவும்.
* '''"இயற்றிவருக்கு" அதீத மரியாதை அளித்தல்'''
**''தொகுப்பதற்குப் பதில் விமர்சித்தல்.'' கட்டுரைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர் ([[Wikipedia:Ownership of articles|single author]]) என்று எவருமில்லை.ஆலோசனையோ, விமர்சனமோ [[விக்கிபீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விட்டுச்செல்வது உதவிகரமானதே என்றாலும் நீங்களே தொகுத்துவிடுவது இன்னும் விரைவானது.
** ''[[விக்கிபீடியா:பக்கங்களை இற்றைப்படுத்துவதில் துணிந்து செயல்படுங்கள்|துணிந்து செயல்படத்]] தவறுதல்.'' ஏதேனும் குழப்பம் விளைவித்துவிடுவோம் என்று தயங்காதீர்கள்.அடுத்து வருபவர்கள் சரிசெய்து விடுவார்கள். எனவே, துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!.
* '''மல்லுக்கு நிற்றல்.''' விக்கிபீடியா என்பது பொதுநலம் விழைகின்ற, மனச்சான்றின்வழி நிற்கிறவர்கள் அடங்கிய தனித்துவம் மிக்க ஒரு சமூகம்.சண்டை பிடிக்க அது ஒன்றும் [[பயனர்வலை]]([http://en.wikipedia.org/wiki/usenet usenet]) இல்லை, [[சொல்லம்பு தொடுத்தல்|சொல்லம்பு தொடுத்தலுக்கு]] ([http://en.wikipedia.org/wiki/flaming flaming]) இங்கு இடமில்லை.விக்கிபீடியா நடத்தைகள் பற்றிய மேல்விவரங்களுக்கு பார்க்க:[[விக்கிபீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நெறி]].
* '''விக்கிமயமாக்கல்- சற்று அதிகமாகவே.''' [[விக்கிபீடியா]] [[உள் இணைப்பு]] [[மூலம்]] [[செழுமை]] [[பெறுவது]] [[உண்மை]] [[முற்றுப்புள்ளி|.]] [[அளவு]]க்கு மிஞ்சினால் [[அமுதம்|அமுதமும்]] [[நஞ்சு]]தானே[[கேள்விக்குறி|?]]
* '''சரியாகத் தொகுக்கப்படாத கட்டுரைகள் கண்டு தெறித்தோடுவது.''' விக்கிபீடியா தொடர்ந்து நடைபெறும் ஒரு பணி. (தற்காலிகமான) குறைகளைப் பொறுத்துக்கொண்டு மேம்பாட்டுக்கு உதவுங்கள் . இங்கு திறமையானவர்கள் நிறையவே உண்டு.ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.உங்கள் ஐயம் நீங்கவில்லையென்றால் பார்க்க:[[விக்கிபீடியா:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்|பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்]].
426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/35650" இருந்து மீள்விக்கப்பட்டது