வில்கெம் எடுவர்டு வெபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
வரிசை 29:
1831இல், [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்]] பரிந்துரையில், தமது 27வது அகவையிலேயே கொட்டிஞ்சென் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிக்கமர்த்தப்பட்டார். தமது மாணவர்களை தாம் விளக்கும் பாடங்களையும் சோதனைகளையும் தவிர்த்து கல்லூரி ஆய்வகத்தில் கட்டணமேதுமின்றி அவர்களே சோதனைகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். தமது இருபதாவது அகவையிலேயே தம் உடன்பிறப்பான ''எர்னஸ்ட் வெபருடன்'' (இவர் [[லைப்சிக்]]கில் [[உடற்கூற்றியல்]] பேராசிரியராக இருந்தார்) இணைந்து ''அலைக் கோட்பாடும் பாய்மத்தன்மையும்'' என்ற நூலை எழுதினார்; இது மிகவும் புகழ்பெற்றது. [[ஒலியியல்]] இவருக்கு மிகவும் விருப்பமான அறிவியல்துறையாக இருந்தது. இத்துறையில் பல நூல்களை எழுதினார். தமது தம்பி எடுவர்டு வெபருடன் இணைந்து ''மனிதர்கள் நடப்பதின் இயக்கவியல்'' என்ற நூலை எழுதினார். இந்த நூல்கள் 1825க்கும் 1838க்கும் இடையே எழுதப்பட்டன. 1833இல் வெபரும் காஸும் இணைந்து முதல் மின்காந்த [[தந்தி]]யை தங்கள் ஆய்வகத்திலிருந்து கொட்டிஞ்சென் இயற்பியல் கழகம் வரை நிறுவினர்.
 
திசம்பர் 1837இல் அரசியல் காரணங்களுக்காக அனோவர் அரசு வெபரை பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்தது. சிலகாலம் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளுக்குச் சென்றிருந்த வெபர் லைப்சிக்கில் இயற்பியல் பேராசிரியராக 1843 முதல் 1849 வரை பணிபுரிந்தார். 1849இல் கொட்டிஞ்சென் மீண்டும் இவரை பணிக்கமர்த்தியது. [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்]] மற்றும் கார்ல் பெஞ்சமின் கோல்ட்ஸ்மிட்டுடன் இவர் எழுதிய '' [[புவியின் காந்தப்புலம்|புவியின் காந்தப்புலத்தின்]] [[நிலப்படத் தொகுப்பு]] : கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டது'' ''(Atlas des Erdmagnetismus: nach den Elementen der Theorie entworfen)''<ref>{{cite web | url=http://www.worldebookfair.com/details.aspx?bookid=466141 | title=Book Details Page: Atlas Des Erdmagnetismus: Nach Den Elementen Der Theorie Entworfen | publisher=World Ebook Fair | accessdate=2012-08-27 | archive-date=2014-07-14 | archive-url=https://web.archive.org/web/20140714212441/http://www.worldebookfair.com/details.aspx?bookid=466141 | dead-url-status=dead }}</ref><ref>{{cite web | url=http://www.alibris.com/booksearch?qwork=-587234182 | title=Atlas Des Erdmagnetismus: Nach Den Elementen Der Theorie Entworfen | publisher=Alibris | accessdate=2012-08-27}}</ref> மிகவும் முக்கிய ஆக்கமாகும். இவரது முயற்சியாலேயே காந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டன. காஸுடன் இணைந்து காந்தவியலில் ஆய்வுகள் மேற்கொண்டார்; 1864இல் ''மின்னியக்க விகிதசம அளவைகள்'' என்ற நூலில் மின்னோட்டத்தை அளப்பதற்கான நெறிமுறைகளை விவரித்திருந்தார். வெபர் கொட்டிஞ்செனில் மரணமடைந்தபோது [[மேக்ஸ் பிளாங்க்]], [[மாக்ஸ் போர்ன்]] புதையுண்டிருந்த அதே கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டார்.
 
1855இல் அரச சுவீடிய அறிவியல் கழக வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/வில்கெம்_எடுவர்டு_வெபர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது