சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 88:
:: (2) கோயம்பேடு வணிக வளாகம்
:: (3) வெளி வட்ட சாலை
==சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லைகள் விரிவாக்கம்==
21 அக்டோபர் 2022 முடிய சென்னை பெருநகர் திட்டப்பகுதி [[சென்னை மாநகராட்சி]], [[ஆவடி மாநகராட்சி]], [[தாம்பரம் மாநகராட்சி]] [ 5 [[நகராட்சி]]கள், 3 [[பேரூராட்சி]]கள், 10 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] உள்ள 179 கிராமங்களை உள்ளடக்கி 1,189 [[சதுர கிலோ மீட்டர்]] பரப்பைக் கொண்டிருந்தது.
 
22 அக்டோபர் 2022 அன்று [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்ட அரசாணையின் படி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 4 [[மாநகராட்சி]]கள், 12 [[நகராட்சி]]களுடன் 5,904 [[சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவுக்கு விரிவடைகிறது. இதனால் [[சென்னை]] மாநகரம் இந்தியாவின் மூன்றாவது பெருநகரம் என்ற தகுதி பெறுகிறது. இந்த விரிவாக்கத்தால் 1,225 கிராமங்கள் கூடுதலாக சேர்ந்துள்ளது.<ref>[http://cms.tn.gov.in/sites/default/files/go/hud_e_184_2022.pdf Chennai Metropolitan Planning Area]</ref> இதன்மூலம் சென்னை பெருநகர [[மக்கள் தொகை]] அளவு 1.59 [[கோடி]]யாக இருக்கும்.<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/888256-spread-over-an-area-of-5-904-sq-km-with-4-corporations-12-municipalities-chennai-becomes-indias-3rd-largest-city-2.html 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகளுடன் 5,904 சதுர கிமீ பரப்பளவுக்கு விரிவடையும் சென்னை - இந்தியாவின் 3-வது பெரு நகரமாகிறது]</ref><ref>[https://www.newindianexpress.com/cities/chennai/2022/oct/22/chennai-metropolitan-areato-become-larger-by-over-1000-villages-2510707.html Chennai Metropolitan Area to become larger by over 1,000 villages]</ref><ref>[https://www.thehindu.com/news/cities/chennai/government-issues-order-for-expanding-chennai-metropolitan-planning-area-to-5904-sq-km/article66041750.ece#:~:text=The%20Tamil%20Nadu%20government%20on,Ranipet%2C%20Kancheepuram%20and%20Chengalpattu%20districts. Order issued for expansion of Chennai to 5,904 sq. km; over 1,200 villages set to be added]</ref>
 
விரிவாக்கப்படும் சென்னை பெருநகரில், நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள [[செங்கல்பட்டு]], [[கும்மிடிப்பூண்டி]], [[மாமல்லபுரம்]], [[திருவள்ளூர்]], [[அரக்கோணம்]], [[காஞ்சிபுரம்]], [[திருத்தணி]] பகுதிகளில் 1,617 சதுர கிலோ மீட்டரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ)வின் கீழ் தற்போது உள்ள 1,189 சதுர கிலோ மீட்டரையும், திட்டமிடப்படாத பகுதிகளான 3,098 சதுர கிலோ மீட்டரும் இணைக்கப்பட்டுள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==