குத்தூசி குருசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==தொடக்க வாழ்க்கை==
[[தஞ்சாவூர் மாவட்டம்]] [[குருவிக்கரம்பை ஊராட்சி|குருவிக்கரம்பையில்]] சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/186348-.html |title=குத்தூசி குருசாமி: சுயமரியாதையின் அடையாளம்! |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-03-23}}</ref> (இவர் தங்கை காந்தம்மா பின்னாளில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] துணைவேந்தரான [[நெ. து. சுந்தரவடிவேலு|நெ. து. சுந்தரவடிவேலுவைத்]] திருமணம் செய்தார்.<ref name=":1" /> 1923 இல் [[திருச்சிராப்பள்ளி]] தேசியக் கல்லூரியில் இடைநிலைப்படிப்பில் சேர்ந்தார். தேசியக்கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் [[மகாத்மா காந்தி|காந்தி அடிகளைக்]] கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.
 
==பொது வாழ்க்கை==
வரிசை 12:
"நான் ஏன் கிறித்தவன் அல்லன்" என்னும் [[பெர்ட்ரண்டு ரசல்]] எழுதிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார். விடுதலை ஏட்டில் 'பலசரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார்.
 
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சடங்குகளற்ற சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். தன் பட்டபடிப்பை நிறைவு செய்தபின் [[ஈரோடு|ஈரோட்டில்]] 12 திசம்பர் 1929 அன்று பெரியாரின் முன்னிலையில் [[இராணி மேரிக் கல்லூரி, சென்னை|இராணி மேரி கல்லூரி]] இறுதியாண்டு மாணவியான [[குஞ்சிதம் குருசாமி|குஞ்சிதம்]] என்பாரைத் திருமணம் செய்தார்.<ref name=":1">{{Citation|title=பெரியாரும் தமிழ் தேசியமும் {{!}} வாலாசா வல்லவன் {{!}} மன்றம் உரைகள் {{!}} Mantram Talks - Part 1|url=https://www.youtube.com/watch?v=XvKTauWy43A|accessdate=2022-10-30|language=ta-IN}}</ref> கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார் குஞ்சிதம். தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றிவிட்டார்.<ref>நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்; பகுதி 1; பக்கம் 314</ref>
 
1935 இல் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார். அறிஞர்கள் சாக்ரடீசு, காரல் மார்க்சு, காந்தியடிகள், டால்சுடாய், லெனின், அன்னி பெசண்டு, செல்லி பிராட்லா, ஸ்டாலின் ஆகியோரின் வரலாற்றை எழுதினார். குடியரசு, விடுதலை,<ref>{{Cite web |url=https://www.thehindu.com/features/magazine/first-biography-of-periyar/article6407629.ece |title=Arresting portrait |last=Venkatachalapathy |first=A. R. |date=2014-09-13 |website=The Hindu |language=en-IN |access-date=2021-03-23}}</ref> புதுவை முரசு, [[ரிவோல்ட் (இதழ்)|ரிவோல்ட்]], [[குத்தூசி (இதழ்)|குத்தூசி]] , அறிவுப்பாதை (வார இதழ்), திராவிடன், பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். [[விடுதலை]] ஏட்டின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/குத்தூசி_குருசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது