லாலா லஜபதி ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
==இளமைக்காலம்==
லாலா லஜபத் ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் [[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]] மாகாணத்தில், இன்றைய [[மோகா மாவட்டம்|மோகா மாவட்டத்தில்]] அமைந்திருக்கும் ''துதி கே'' என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி ஆகியோர் ஆவர். இஅவ்ர்கள் அகர்வால் பனியாக்கள். சிலர் இவர்கள் [[சமணர்]]கள் என்கிறார்கள். [[இந்து சமயம்]], [[சமணம்]] ஆகியவற்றோடு தொடர்புகளைக் கொண்டிருந்த இவரது தந்தையார் [[இசுலாம்]] மதத்துக்கு மாறிப் பின்னர் மீண்டும் இந்துவானார். லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் [[லூதியானா மாவட்டம்|லூதியானா மாவட்டத்தில்]] உள்ள , ஜாக்ராவோன் என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு [[நூல்நிலையம்]] ஆகவும், [[அருங்காட்சியகம்]] ஆகவும் விளங்குகிறது.
 
==அரசியல் வாழ்க்கை==
இவர் 1888 ஆம் ஆண்டில் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர். ஏனையோர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த [[லோகமான்ய திலகர்|லோகமான்ய திலகரும்]], வங்காளத்தைச் சேர்ந்த [[பிபின் சந்திர பால்|பிபின் சந்திர பாலும்]] ஆவர். கூட்டாக இம்மூவரையும் லால்-பால்-பால் என அழைப்பர். ராய், இன்றைய இந்து தேசியவாதக் கட்சியான [[பாரதீய ஜனதாக் கட்சி]]யின் முன்னோடியான [[இந்து மகா சபை]]யின் உறுப்பினராகவும் இருந்தார்.
 
1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது [[தேசிய உணர்வு|தேசிய உணர்வைத்]] தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. பிரித்தானிய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், [[தன்மானம்|தன்மான]] உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும், பிரித்தானியரிடம் இருந்து ஓரளவு [[தன்னாட்சி]]யைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/லாலா_லஜபதி_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது