பேச்சு:அனைத்துலக முறை அலகுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
No edit summary
வரிசை 8:
 
::''அனைத்துலக'' என்பது "International" என்பதற்கு ஈடாக, பரவலாகப் பயன்படுத்தும் சொல். எடுத்துக்காட்டாக அ. கி. மூர்த்தியின் ''அறிவியல் அகராதியில்'' "International Date Line" என்னும் சொற்றொடருக்கு ''அனைத்துலக நாட்கோடு'' என்று குறிக்கப்பட்டுள்ளது. "க்ரியாவின்" தற்கால அகராதி, ''அனைத்து'' என்னும் சொல்லுக்குத் தரும் பொருளில் எடுத்துக்காட்டுத் தொடராக ''அனைத்துலக எழுத்தாளர்கள்'' என்பதனையும் தருகின்றார்கள். "க்ரியாவின்" தற்கால அகராதி, ''அனைத்து'' என்பதற்கு "மொத்த, அகில, whole of, all" என்று பொருள் தருகின்றது. அனைத்து என்பதன் பொருள் "முழுவதும், எல்லாம்" என்பது மிக நன்றாக அறியப்பட்டது. எனவே ''அனைத்துலக'' என்றால் உலகம் முழுவதற்குமான என்று பொருள். அனைத்தும் என்று ''உம்'' பின்னொட்டு இருந்தால், சிறிதளவு வேறு பொருள் கொள்ளும். "மாடுகள் அனைத்தும்", "பழங்கள் அனைத்தும்" என்று பல பொருள்களை மொத்தமாகக் குறிக்கும். இங்கும் கூட எல்லாமும், மொத்தமும் என்னும் பொருளில் வருவதுதான். ''அனைத்து இந்திய ஆசிரியர்கள் கருத்தரங்கு'' என்றால், இந்தியா முழுவதிலும் உள்ள ஆசிரியர்களுக்கான அல்லது அவர்கள் பங்குகொள்ளும் கருத்தரங்கு என்பது பொருள். எனவே அனைத்துலக, அனைத்து இந்திய போன்ற ஆட்சிகளில் அனைத்து என்பது முழுவதும் (உலகமோ, இந்தியாவோ) என்பதைச் சுட்டும். அனைத்து இந்திய என்றால் எல்லா இந்தியாக்களும் என்று பொருள் கொள்ளமுடியாது. அனைத்துலக முறை அலகுகள் என்பது சரியே என்பது என் கருத்து. அடுத்ததாக, நீங்கள் "சீர்தரம் செய்யப்பட்ட" என்ற பொருள் காணப்படவில்லை என்று கூறுவது சரியான கூற்று இல்லை. இவை அனைத்தும் சீர்தரம் செய்தவையே (ஒழுங்குபடுத்தித் தேர்ந்து கொண்டவையே). தமிழில் அனைத்துலக முறை அலகுகள் என்னும் பொழுது இயல்பாய் பொருந்திவரும் பொருள். System என்பதற்கு தமிழில் முறை என்றும் கூறுவது வழக்கம். ஆனால் முறை என்பது natural order, standardized system, oragnaized system என்றெல்லாம் பொருள் சுட்டும். அதைத்தான் குறித்தேன். அனைத்துலக முறை அலகுகள் சரியான பெயர், இதனை மாற்ற வேண்டாம். ''உலக முறை அலகுகள்'' என்று சுருக்கமாகவும் கூறலாம், ஆனால் அனைத்துலக என்பது உலகப்பொதுமையை ஒருவாறு வலியுறுத்துவது. --[[பயனர்:செல்வா|செல்வா]] 01:23, 3 ஏப்ரல் 2009 (UTC)
-----------------------
 
இவை சீர்தரம் செய்யப்பட்ட அலகுகளே என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ’International System of Units’ என்பதில் அந்தப் பொருள் இல்லை என்பதையேக் குறிப்பிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதுப் போல் ‘முறை’ என்ற சொல் ஆங்கிலச் சொல் சுட்டாத இந்தச் சிறப்புப் பொருளையும் (standardized system) சுட்டுவது தமிழின் சுவையையும் பெருமையும் உணர்த்துகிறது.
 
’அனைத்து’ என்ற சொல்லுக்கு வருவோம். இதை இக்கட்டுரைக்கான உரையாடலாக மட்டும் கொள்ளாமல் பொதுவான ஒரு தமிழ்ச் சொல்லின் பயன்பாடு குறித்த ஆய்வாகக் கொள்ளலாம்.
 
All India என்பதற்கு அனைத்திந்திய, அகில இந்திய போன்ற சொற்களும், ‘of the whole world’ என்பதற்கு அனைத்துலக, அகில உலக போன்ற சொற்களும் பயன்படுத்தப்படுவது முற்றிலும் உண்மையே. ஆனால் அது தமிழ் மரபு அன்று. அந்த ஆட்சி அவசியமும் அன்று. அயராதுத் தமிழ்ப்பணி ஆற்றி வரும் பேராசிரியர் நன்னனின் கருத்தும் இஃதேவாகும். இந்தியாவில்தான் ‘அனைத்திந்திய வானொலி நிலையம்’ என்று சொல்கிறோம். இலங்கையில், ‘இலங்கை வானொலி நிலையம்’ என்று சொல்கிறார்களா அல்லது ‘அனைத்து இலங்கை வானொலி நிலையம்’ என்று சொல்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இல்லை ‘அனைத்து இலங்கை’ என்ற சொல்லாட்சிதான் இருக்கிறதா? தமிழ் மரபை விட்டுவிட்டு ஆங்கில மரபின் வாலைப்பிடித்துச் செல்வதுதான் சிறப்பு என்ற பொருளற்ற எண்ணமே இத்தகையப் பயன்பாடுகள் நிலைப்பெற்றமைக்குக் காரணம். ஆங்கில மரபுப்படி ‘All the world is a stage’ என்பதும், ‘All England Lawn Tennis Club’ என்பதும் சரியாக இருக்கலாம். ஆனால் தமிழ் மரபு அதுவன்று. தமிழக விவசாயிகள் சங்கம், அரியலூர் இளைஞர்ச் சங்கம், என்றுதான் சொல்வதுதான் மரபேத் தவிர அனைத்துத் தமிழக விவசாயிகள் சங்கம் என்றோ, அனைத்து அரியலூர் இளைஞர் சங்கம் என்றோக் குறிப்பிடுவது சரிதானா? அவசியந்தானா? த.வி போன்ற இடங்களில் இப்படிப்பட்டக் குறையுள்ள தமிழை மேலும் வளர விடாமல், அறவே தவிர்க்க வேண்டியதன் அவசியம் நீங்கள் நன்கு அறிந்ததே.
 
கிரியா அகராதி ‘அனைத்து’ என்பதற்கு ‘அகில’ என்றுப் பொருள் கூறுவதாக எழுதியிருக்கிறீர்கள். அகிலம் என்பது உலகத்தைக் குறிக்கும் சொல். இவ்விரு சொற்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், மேற்கூறியதுப் போல் இதுவும் ஒரு குறையுள்ளப் பயன்பாடே என்றும் எனக்குப்படுகிறது.
 
இதுக் குறித்து, ஆழ்ந்தத் தமிழறிவும், பன்னாட்டுத் தமிழ்ப் பரிச்சயமும், உயர்ந்தப் பண்பும் கொண்ட த.வி பயனர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
 
மேலும் ‘international’ என்பது அனைத்து நாடுகளையும் குறிக்கும் சொல் அல்ல. பன்னாட்டு என்பதையே அச்சொல் குறிக்கிறது. இந்த முறை அலகுகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாத நாடுகளும் உண்டு. உதாரணம் அமெரிக்கா. எனவே உலக முறை அலகுகள் என்ற ஆட்சிப் பொதுமையை உணர்த்தவில்லை என்றுக் கருதினால், பன்னாட்டு முறை அலகுகள் என்று ஆளலாம்.--[[பயனர்:Aravind.rec|Aravind.rec]] 05:42, 3 ஏப்ரல் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அனைத்துலக_முறை_அலகுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அனைத்துலக முறை அலகுகள்" page.