உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புதிய பகுப்பு: புதிய பகுதி
வரிசை 432:
==Biome==
அ.கி.மூர்த்தியின் அகரமுதலி இதற்கு "உயிர்வாழ்பகுதி" என்றும், விக்சனரி "நிலையான உயிரினம் வாழும் பகுதி" என்றும் கலைச் சொற்கள் தருகின்றன. ஆனால், இவை Biome என்பதன் வரைவிலக்கணத்துக்குச் சரியாகப் பொருந்துவதாகத் தெரியவில்லை. Biome என்பது "ecosystems with ecologically similar climatic conditions" எனப்படுகின்றது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது முன்காட்டிய இரண்டுமே பொருத்தமாக இல்லை. அச்சொற்கள், ecosystem என்பதையோ அல்லது similar climatic condition என்பதையோ குறித்துக் காட்டவில்லை. ecosystem என்பதை "சூழல்மண்டலம்" அல்லது "சூழல்தொகுதி" என்னும் சொற்களால் குறிப்பிடுகிறோம். ஆகவே Biome என்பதற்குச் "சீர்சூழல்தொகுதி" (முறைப்படி எழுதுவதானால் "சீர்சூழற்றொகுதி" என எழுதவேண்டும்) அல்லது "சீர்சூழல்மண்டலம்" எனலாம் என்பது எனது கருத்து. ஏனையோரின் கருத்தையும் அறியலாம். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 14:54, 4 ஏப்ரல் 2009 (UTC)
 
== புதிய பகுப்பு ==
 
உங்கள் குறிப்பிற்கு நன்றி. கண்ணதாசன் பாடல்களைத் தொகுக்க எண்ணியுள்ளேன். அதற்கே இந்தப் பகுப்பு. அதற்கான ஒரு தகவல்பெட்டி வார்ப்புரு உருவாக்குவது குறித்து ஆய்ந்துக் கொண்டிருக்கிறேன். உங்களால் உதவ முடிந்தால் மகிழ்வேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Natkeeran" இலிருந்து மீள்விக்கப்பட்டது