மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:Archhistory}}
 
15 ஆம் நூற்றாண்டில் தோன்றி [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] பரவிய [[மறுமலர்ச்சி|மறுமலர்ச்சிப்]] பண்பாடு சார்ந்த கட்டிடக்கலையே '''மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை''' (''Renaissance architecture'') எனப்படுகின்றது. [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசுக்]] காலத்தில் நிலவிய பண்பாட்டு அம்சங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தமையையே இது குறிக்கின்றது.
 
==சிறப்பியல்புகள்==
 
இப்பாணியில் பகுத்தறிவுக்கு ஒத்த தெளிவும், ஒழுங்கமைவும் கொண்ட உறுப்புக்கள் எளிமையான கணித [[அளவுவிகிதம்|அளவுவிகிதப்படி]] (''proportions'') அமைந்திருந்ததோடு, [[ரோமக் கட்டிடக்கலை|ரோமக் கட்டிடக்கலையின்]] உணர்வுபூர்வமான மீள் உருவாக்கமாகவும் இது அமைந்தது. இதற்கு முந்திய, கல் வேலைப்பாடுகளும், ஒழுங்கற்ற முக்கோணக் கூரை முகப்புகளும் அமைந்த பாணிகளுடன் ஒப்பிடுகையில், [[தூண்|தூண்களையும்]], [[சமச்சீர்|சமச்சீரான]] (''symmetry'') வடிவத்தையும் கொண்ட எளிமையான [[கட்டிடம்|கட்டிடங்களை]] இப்பாணி வழங்கியது. செந்நெறிக்காலப் பாணித் தூண்களும், [[வடிவவியல்]] ரீதியில் சிறப்பாக அமைந்த [[வடிவமைப்பு|வடிவமைப்புகளும்]], [[அரைக் கோளம்|அரைக் கோள]] வடிவக் [[குவிமாடம்|குவிமாடங்களும்]] மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும்.
 
==இத்தாலிய மறுமலர்ச்சிப் பாணி==
 
[[Image:Florence italy duomo.jpg|thumb|right|250px|குவிமாடத்துடனும், மணிக் கோபுரத்துடனும் கூடிய டுவோமோவின் (''Duomo'') பக்கத் தோற்றம்.]]
இந்த இயக்கம் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [[புளோரன்ஸ்|புளோரன்ஸிலும்]], மத்திய [[இத்தாலி|இத்தாலியிலும்]], மனிதத்துவத்தின் (Humanism) ஒரு வெளிப்பாடாக ஆரம்பமாகியது. இத்தாலியில் நான்கு விதமான மறுமலர்ச்சிப் பாணிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது:
 
# [[லியோன் பட்டிஸ்டா அல்பர்ட்டி]] (''Leone Battista Alberti'') மற்றும் [[பிலிப்போ புரூணலெஸ்கி]] (''Filippo Brunelleschi'') ஆகியோரின் ஆரம்பகால மறுமலர்ச்சி,
# [[டொனாட்டோ பிரமண்டே]] (''Donato Bramante'') மற்றும் [[ராபேலோ சாண்டி|ராபேல்]] (''Raphael'') என்போரின் உயர் மறுமலர்ச்சி,
# [[மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி|மைக்கலாஞ்சலோ]], [[கியூலியோ ரொமானோ]], [[அண்ட்ரியா பல்லாடியோ]] போன்றோரின் ஆக்கங்களில் காணப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாங்குகள் சார்ந்த (''Mannerist'') போக்குகள், மற்றும்
# [[கியான் லொரென்சோ பெர்னினி]] என்பவரின் ஒருவித [[பரோக் கட்டிடக்கலை|பரோக்]] பாணி.
 
வரிசை 30:
[[பகுப்பு:கட்டிடக்கலை வரலாறு]]
 
 
\
{{Link FA|pt}}
 
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சிக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது