புடைப்புச் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==வரலாறு==
புடைப்புச் சிற்பங்கள் பண்டைக் காலம் முதலே பல்வேறு நாடுகளின் [[சிற்பக்கலை]]யின் ஒரு அம்சமாக இருந்து வந்துள்ளன. [[பண்டை எகிப்து|பண்டைக்கால எகிப்து]], [[பபிலோனியா]] போன்ற இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புடைப்புச் சிற்ப முறையிலான சிற்பங்கள் இருந்தன. இவற்றின் அழிபாடுகளை இன்றும் நாம் காணமுடிகின்றது. மேற்கு நாடுகளில் [[கிரேக்க நாகரிகம்|கிரேக்க]], [[ரோம நாகரிகம்|ரோம]] நாகரிகக் காலத்திலும் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. இவை கட்டிடங்களின் பகுதிகளாகவும், தனியாகவும் செதுக்கப்படன.
 
இந்தியாவிலும் புடைப்புச் சிற்பங்கள் மிகப் பழைய காலம் தொட்டே இருந்து வருவதற்கான சான்றுகள் உண்டு. [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகக்]] காலத்தைச் சேர்ந்தனவாக, [[மொகெஞ்சதாரோ]], [[அரப்பா]] போன்ற இடங்களில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கொண்ட [[சிந்துவெளி முத்திரை|முத்திரைகள்]] புடைப்புச் சிற்பங்களின் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டவை. எனினும் இவை செதுக்கப்பட்டவை அல்ல. அச்சுக்களில் அழுத்தி உருவாக்கப்பட்டவை.
 
சிந்துவெளி நாகரிகக் காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் உருவான பல நாகரிகக் காலங்களுக்கு உரிய கட்டிடங்களில் புடைப்புச் சிற்பங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன. [[இந்து சமயம்|இந்து]], [[பௌத்த சமயம்|பௌத்த]], [[சமண சமயம்|சமணக்]] கட்டிடங்கள் அனைத்திலுமே இவை காணப்படுகின்றன.
 
தமிழ் நாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் [[பல்லவர் காலம்|பல்லவர்]] ஆட்சிக்காலத்துடனேயே தொடங்குகின்றன எனலாம். கோயில்களைக் [[குடைவரைக் கோயில்|குடைவரைகளாகக்]] கல்லில் உருவாக்கியது பல்லவர் காலத்திலேயேயாம். இக் காலக் குடைவரை கோயில்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரம் குடைவரைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட [[கற்றளி]]களிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. குடைவரைகள், கற்றளிகள் என்பவற்றைத் தவிர்த்து, பல்லவர் காலத்து [[நடுகல்|நடுகற்களிலும்]] தமிழகத்தில் முதன் முதலாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இதற்கு முந்தியகாலக் நடுகற்களில் கீறல் உருவங்களே வரையப்பட்டிருந்தன.
 
[[bg:Релеф (скулптурен)]]
"https://ta.wikipedia.org/wiki/புடைப்புச்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது