மரம் (கட்டிடப் பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==கட்டிடப் பொருளாக மரத்தின் வரலாறு==
 
மரம், காலப்போக்கில் விரைவில் அழிந்து விடக்கூடிய ஒரு பொருள். மரத்தினால் கட்டப்பட்ட கட்டிடங்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாக மிகப் பழையகால மரக் கட்டிடங்கள் எதுவும் இன்றுவரை நிலைத்திருக்கவில்லை. எனினும், [[தொல்பொருளாய்வு]], [[இலக்கியம்]], மற்றும் பழங்காலக் [[கட்டிடக்கலை]] எழுத்தாக்கங்கள் என்பவற்றினூடாக, பல ஆயிரம் ஆண்டுகளாகவே மரம் கட்டிடப் பொருளாகப் பயன்பட்டுவருவதை அறிய முடிகின்றது.

[[Image:Wood from victoria mountain ash.jpg|thumb|250px|left|அரிந்து அடுக்கப்பட்டுள்ள மரங்கள்]]
ஆரம்பகாலத்தில் மரம், குற்றிகளாகச் செப்பனிடப்படாத வடிவிலேயே பயன்படுத்தப்பட்டன. காலப் போக்கில், ஒழுங்கான வடிவத்திலும், தேவையான அளவுகளிலும் மரங்களை அரிந்து பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் உருவாயின. மரம் ஒரு சிறந்த கட்டிடப் பொருளாயினும், அது தொடர்பிலும் சில வரையறைகள் உள்ளன. [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] ரீதியான வரையறைகள், [[பொருளியல்|பொருளாதார]] ரீதியான வரையறைகள், [[சூழலியல்]] தொடர்பான வரையறைகள், என்பவற்றினால் விளையக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியில், [[செய்முறை மர உற்பத்திகள்]] (processed wood products) விருத்தி செய்யப்பட்டன. [[ஒட்டுப்பலகை]] (plywood), [[நார்ப்பலகை]] (fibre board), [சிம்புப்பலகை]] (chip board) என்பன இவற்றுட் சில. அண்மைக் காலங்களில், [[அடுக்குத்தகட்டு மரம்|அடுக்குத்தகட்டு மரக்]] கட்டுமானக் கூறுகள் (laminated wood components) பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(கட்டிடப்_பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது