ஏகன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ராஜூ சுந்தரம் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: == கதை == பல படங்களில் அஜீத்தை சீரியஸாகவே பார்த்த கண்களுக்கு இ…
(வேறுபாடு ஏதுமில்லை)

07:05, 7 மே 2009 இல் நிலவும் திருத்தம்

கதை

பல படங்களில் அஜீத்தை சீரியஸாகவே பார்த்த கண்களுக்கு இதில் சற்று ஆறுதல். இடைவேளை வரை பல காட்சிகளில் கலகல அஜீத்தைப் பார்க்க முடிகிறது.

அஜீத் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி. ஒன்மேன் ஆர்மி என்று தந்தை நாசரே வர்ணிக்கும் அளவுக்கு தனியாளாக அடித்துத் துவம்சம் செய்யும் போலீஸ் இவர். வில்லன் சுமனுடைய பழைய கூட்டாளி தேவன் போலீஸ் அப்ரூவராக மாறிவிட, அவரைக் கொன்று விடத் துடிக்கிறார் சுமன். இதனால் மறைந்து வாழ்கிறார் தேவன். அவருக்கு ஒரே ஒரு மகள் (பியா). ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கிறார்.

பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வரும் எனக் கருதும் போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை அஜீத்திடம் விடுகிறது. போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறுவேடத்தில் போய் இதைச் செய்ய வேண்டும், அதே நேரம் பியாவின் தந்தை தேவனணையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த பணியில் அஜீத் எப்படி தன் திறமையைக் காட்டி ஏகனாக உலா வருகிறார் என்பது மீதிக்கதை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகன்_(திரைப்படம்)&oldid=376476" இலிருந்து மீள்விக்கப்பட்டது