லூக்கா நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ug:لۇقا بايان قىلغان خۇش خەۋەر
சி தானியங்கி இணைப்பு: arc:ܟܪܘܙܘܬܐ ܕܠܘܩܐ; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:Saint Luke.jpg|thumbnail|right|225px|<center>புனித லூக்கா</center> ]]
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''லூக்க நற்செய்தி''' [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[விவிலியம்|விவிலியத்தின்]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் மூன்றாவது நூலாகும். இந்நற்செய்தி நூலோ அல்லது [[அப்போஸ்தலர் பணி]]யோ லூக்கா எழுதியதாக நேரடி சான்றுகள் இல்லாத போதும் கொலோசயர் 4:14 குறிப்பிடப்பட்டுள்ள லூக்காவின் பெயரால் வெளியடப்பட்டுள்ளது. லூக்கா ஒரு வைத்தியராவார். [[ஆன்மீகம்|ஆன்மீக]] வாழ்வில் இவர் சின்னப்பரின் (பவுல்) சீடராவார்.
இந்நூலின முக்கிய நோக்கமாக “அவர் நன்மை செய்கிறவராகவும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணப்படுத்துகிறவராகவ்ம் எங்கும் சென்றார்” என்பதை குறிப்பிடலாம். (அப்போஸ்தலர் பணி 10:38 ஒப்பிடுக லூக்கா 4:18).இந்நூல் எலனிக் ([http://en.wikipedia.org/wiki/Hellenistic_civilization Hellenic]) மக்களுக்காக எழுதப்பட்டது. மொத்தம் 24 அதிகாரங்களில் 1151 வசனங்களை கொண்டுள்ளது.
== உள்ளடக்கம் ==
லூக்கா நற்செய்தியின் உள்ளடக்கம்.
*ஸ்நாபக யோவானின் பிறப்பு
வரிசை 52:
*விண்ணேற்றம்
 
== எழுத்தாளர் ==
இநூலை எழுதியவரே [[அப்போஸ்தலர் பணி]] என்ற நூலையும் எழுதினார் என கொள்வதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இவ்விரு நூல்களுமே தேயோப்பிலுஸ் என்பவரை விழித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, இதற்கு சிறந்த அதாராமாகும். மேலும் அப்போஸ்தலர் பணி நூலின் பல இடங்களில் “எனது இயேசுவின் சரிதம் கூறும் முதல் நூலில்” என மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. மேலும் இவ்விரண்டு நூல்களுமே பொதுவான எழுத்து நடையையும் சமய கோட்பாடு ஒருமைப்பாட்டையும் கொண்டுள்ளன. இவ்விரண்டு நூல்களிலுமே லூக்கா இந்நூல்களை எழுதினார் என்பதற்கு நேரடி ஆதரங்கள் இல்லை எனினும் அப்போஸ்தலர் பணியில் (பவுலின் மறைப்பரப்பு பற்றிய நூலாகும்) அதிகாரங்கள் 16, 20, 21 மற்றும் 27 இல் "நாம்" என பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, எழுத்தாளர் பவுலுடன் கூட மறைப்பரப்பு பணியில் சென்றவர் என்பதை தெளிவாக்குகிறது. மேலும் [http://www.tamilchristians.com/tamilbible/col/col4.html கொலோசயர் 4:14] இல் பிரியமான வைதியனாகிய லூக்கா என பவுல் கூறுவதிலிருந்தும் [http://www.tamilchristians.com/tamilbible/phle/index.html பிலமோன்1:24] இல் உடன்வேலையாளியான லுக்கா என குறிப்பிடுவதிலிருந்தும் லூக்கா பவுலுடன் சேர்ந்து மறைப்பரப்பு பணியில் சென்றார் என்பது தெளிவாகிறது. இக்காரணங்களுக்காக, இவ்விரு நூல்களும் லூக்கா எழுதியிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.
 
லுக்கா இயேசுவை நேரில் பார்க்கவில்லை எனினும்அவர் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து....ஒழுங்குப்படுத்தி எழுதினார். மேலும் தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் கூறியவாரே எழுதியுள்ளார் (லூக்கா 1:2-4). இயேசுவை நேரில் கண்டவர்களின் சாட்சிகளுக்கு மேலதிகமாக, [[மாற்கு நற்செய்தி]]யையும் உசாத்துணையாக பயன்படுத்தியதாக கருதப்படுகிறது.
== மூல வாசகர் ==
இந்நற்செய்தி யூதரல்லாத கிறிஸ்தவருக்காக கிரேக்க மொழியில் எழுத்ப்பட்டுள்ளது. இந்நூல் “மாண்புமிகு தேயோப்பிலுஸ்” (Theophilus,) அவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது. தேயோப்பிலுஸ் என்பது கிரேக்க மொழியில் "கர்தருக்குள் பிரியமானவரே" எனபொருள்படும் எனவே இந்நூல் ஒருகுறிப்பிட்ட நபருக்கு எழுதப்பட்ட தன்றி கிறிஸ்தவருக்கு எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்நூல் [[கி.பி.]] 50-100 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது.
== நற்செய்திகளுடன் ஒப்பீடு ==
மொத்தம் 1151 வசனங்களில் 389 வசனங்கள் மத்தேயு மாற்கு நற்செய்திகளுடன் பொதுவானவை 176 [[மத்தேயு நற்செய்தி|மத்தேயுவுடன்]] மட்டும் பொதுவானது 41 [[மாற்கு நற்செய்தி|மாற்குவுடன்]] மட்டும் பொதுவானது. 544 வசனங்கள் லூக்காவிற்கு மட்டுமே உரியவையாகும். லூக்கா மற்றைய நற்செய்திகளில் இல்லாத 17 [[இயேசுவின் உவமைகள்|உவமைகளையும்]] 7 [[இயேசுவின் புதுமைகள்|இயேசுவின் புதுமைகளையும்]] குறிப்பிட்டுள்ளார்.
 
== பெண்கள் ==
மற்றயை மூன்று நற்செய்திகளுடன் ஒப்பிடும் போது லூக்கா நற்செய்தியில் பொண்களுக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இயேசுவின் தாயாரான மரியாள் திருமுழுக்கு யோவானின் தாயான எலிசபேத்து ([http://www.tamilchristians.com/tamilbible/luke/luke1.html அதி 1]) மற்றும் தீர்க்கதரிசியான அன்னாள் ([http://www.tamilchristians.com/tamilbible/luke/luke2.html 2:36]) போன்ற பெண்களை இந்நற்செய்தி அதிக இடமளித்து விளக்குகிறது.
 
== உசாத்துணை ==
*[http://www.tamilnation.org/sathyam/east/bible/mp030b.htm மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புப் திட்டம்] லூக்கா நற்செய்தி
*[http://www.newadvent.org/cathen/09420a.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம்]
*[http://www.tamilchristians.com/tamilbible/luke/index.html தமிழ் விவிலியம்]
*[http://www.tamil-bible.com/lookup.php?Book=Luke&Chapter=&Verse=&Kjv=0 தமிழ் விவிலியம்]
 
 
 
 
[[பகுப்பு:விவிலியம்]]
 
[[ar:إنجيل لوقا]]
[[arc:ܟܪܘܙܘܬܐ ܕܠܘܩܐ]]
[[bg:Евангелие от Лука]]
[[br:Aviel Lukaz]]
"https://ta.wikipedia.org/wiki/லூக்கா_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது