பறவைக் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bs:Ptičja gripa மாற்றல்: ms:Selesema burung
சி தானியங்கி இணைப்பு: lo:ໄຂ້ຫວັດນົກ; cosmetic changes
வரிசை 1:
'''பறவைக் காய்ச்சல்''' என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த [[தீ நுண்மம்|தீ நுண்மங்கள்]] பொதுவாக காணப்பட்டலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக இத்தீ நுண்மம் பரவுமாயின் அது வேகமாகப் பரவும் கூடியது.
 
மேற்கூறிய பறவை சார்ந்த தீ நுண்மங்கள் மனிதரைப் பொதுவாகப் பாதிப்பதில்லையாயினும், [[1997]] ஆம் ஆண்டிலிருத்து அவ்வாறான தொற்று பண்ணைவைத்திருப்போர் போன்ற பறவைகளுடன் நேரடித் தொடர்புடையர்களிற்குப் பரவத்தொடங்கியுள்ளது. [[2003]] ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியிலும் [[2004]] ஆம் ஆண்டின் தொடக்கட்திலும் [[ஆசியா]]வில் '''H5N1''' தீ நுண்ம்த்தால் பாரிய அளவிலான [[கோழி வளர்ப்பு|பறவை/கோழிப்பண்ணைகள்]] பாதிக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் பாரியளவிலான தொற்றுகை ஆசியாவில் பண்ணைகளில் ஏற்பட்டன. [[கம்போடியா]], [[சீன மக்கள் குடியரசு|சீனா]],[[இந்தோனேசியா]], [[யப்பான்]], [[லாவோஸ்]], [[தென்கொரியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[மலேசியா]], [[துருக்கி]], [[கசகஸ்தான்]], [[மங்கோலியா]], [[இரசியா]], [[ருமேனியா]] ஆகிய நாடுகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. 100 மில்லியனிற்கும் மேலான வளர்புப் பறவைகள் இத்தொற்றுகையைக் கட்டுப்படுத்துமுகமாக அழிக்கப்பட்டுள்ளன.
தீ நுண்மங்கள் இலகுவில் மாற்றமுறக் கூடியன. அதாவது இலகுவில் தமது அடிப்படை இழையுருக்களை மாற்றி வேறுவடிவை எடுக்கின்றன. இவ்வாறு மாற்றமுற்றுப் புதிதாக உருவாகும் தீ நுண்மம்மானது மனிதரிலிருத்து மனிதருக்குப் பரவும் தொற்றாக உருவாகுமானால் விரைவாகவும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் பரவி மேற்குறிப்பிட்ட கொள்ளையை உருவாக்கும் என்பதே [[உலக சுகாதார நிறுவனம்|உலக சுகாதார நிறுவனத்தின்]] எச்சரிக்கையாக உள்ளது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக வைத்து ஆராயும் போது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகள் புதியவகை தீ நுண்மத்தால் உருவாகும் காய்ச்சல் சார் கொள்ளைகள் உலகை பாதிக்கின்றன.
 
== காய்ச்சலின் அறிகுறிகள் ==
 
உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி,தொண்டை ப் புண், இருமல், கண் வருத்தம் (Fever, Muscle weakness and/or pain, Sore throat and cough, Sore eyes -conjunctivitis )
 
== இறப்பை ஏற்படுத்தும் காரணிகள் ==
வரிசை 12:
கடுமையான வைரஸ் நியூமோனியா, சுவாச அழுத்தம், பல அங்கங்கள் செயலிழப்பு (Severe viral pneumonia, Respiratory distress syndrome, Multi- organ failure)
 
== மருந்துகள், தடுப்பூசிகள் ==
 
தமிஃபுளு (Tamiflu) எனப்படும் தீ நுண்ம-எதிர் மருந்தே தற்பொழுது பறவைக் காய்ச்சலைக் குணப்படுத்தப் பயன்படுகின்றது. இம்மருந்து மாற்றமடைந்து உருவாகப் போகும் தீ நுண்மத்துக்கு எதிராகவும் பயன்படும் என நம்பப்படுவதால் இம்மருந்தை வளர்ச்சியடைந்த நாடுகள் பெருமளவில் சேமிக்கத் தொடங்கியுள்ளன. இம்மருந்தின் உற்பத்திச் செலவு, அனுமதி விதிகள் ஆகியன அதிகமாகவும் இறுக்கமாகவும் உள்ளதால் மூன்றாம் உலக நாடுகள் போதியளவு கையிருப்பில் வைக்க முடியாதுள்ளன. தமிஃபுளுவின் குணமாக்கும் திறமை, பக்கவிளைவுகள் போன்ற விதயங்களும் சில சமயங்களில் கேள்விக்குள்ளாகின்றன. தமிஃபுளுவிற்கு குறித்த தீநுன்மங்கங்கள் இயைபாக்கமடைகின்றனவா எனும் வினாவும் சில சமயங்களில் எழுந்துள்ளது.
 
உருவாகப் போகும் தீ நுண்மத்தின் தன்மை, விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் உலகின் பல பாகங்களிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தடுப்பூசிகள் தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ளன. பாரியளவிலான உற்பத்திக்கு தற்போதய தடுப்பூசி தயாரிப்பு முறைகள், அவை சார்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. நோய் பாரிய அளவில் பரவுவதற்கு முன்னதாக தடுப்பு மருந்துகளை பாரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு மருந்து தாயாரிக்கும் நிறுவனங்கள் பின் நிற்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 57:
[[lb:Vullegripp]]
[[ln:Gilípi ya ndɛkɛ]]
[[lo:ໄຂ້ຫວັດນົກ]]
[[mk:Птичји грип]]
[[ms:Selesema burung]]
"https://ta.wikipedia.org/wiki/பறவைக்_காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது