திருமுருகாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[பத்துப்பாட்டு]] என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது '''திருமுருகாற்றுப்படை'''. [[திருமுறை]] வகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. [[மதுரை]]யைச் சேர்ந்த [[நக்கீரன்]] என்னும் புலவரால் எட்டாம் நூற்றாண்டளவில் இது இயற்றப்பட்டதாகக் கருதப்படுகின்றது. முருகப் பெருமானைப் [[பாட்டுடைத்தலைவன்|பாட்டுடைத்தலைவ]]னாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட [[ஆசிரியப்பா]]வால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
 
திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் [[அறுபடைவீடுஅறுபடைவீடுகள்]]கள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் [[திருப்பரங்குன்றம்|திருப்பரங்குன்றமும்]], இரண்டாம் பகுதியில் [[திருச்செந்தூர்]] எனப்படும் [[திருச்சீரலைவாய்|திருச்சீரலைவாயும்]], மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/திருமுருகாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது