பலமனைவி மணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 7:
இதைவிடப் பலவாறான [[பொருளாதாரம்|பொருளாதாரக்]] காரணங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன. வாழ்க்கைக்கான பொருளாதாரச் செயற்பாடுகளில், பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும் சமுதாயங்களில் பலமனைவி மணமுறை அதிக அளவில் இருப்பதாக மானிடவியலாளர் கூறுகிறார்கள். குறிப்பாக முற்காலத்தில், உணவு சேகரித்தல், [[விவசாயம்]] போன்ற பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் பெண்களின் பங்களிப்பை வேண்டிநின்றன. இதனால் வசதி படைத்தவர்கள் பல பெண்களை மணந்து கொண்டனர்.
 
அடிக்கடி ஏற்படும் [[போர்]] போன்ற நிகழ்வுகளில் பெருமளவில் ஆண்கள் இறக்க நேரிடுவதால் சமுதாயத்தின் [[மக்கள்தொகை]]யில் பெண்களின் தொகை அதிகரிப்பதால், எல்லாப் பெண்களும் மணமுடிப்பதை உறுதி செய்வதற்காகப் பல சமுதாயங்களில் பலமனைவி மணமுறை தேவைப்பட்டதாகச் சிலர் வாதிட்டனர். ஆனால், [[ஆண்]], [[பெண்]] மக்கள்தொகைச் சமநிலை காணப்படுகின்ற சமுதாயங்களிலும், சிலசமயங்களில், ஆண்கள் பெண்களைவிடக் கூடுதலாக இருக்கும் சமுதாயங்களிலும்கூடப், பலமனைவி மணமுறை பின்பற்றப்படுவது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:திருமண முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பலமனைவி_மணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது