நுவரெலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

480 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நுவரெலியா [[இலங்கை]]யின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். சிங்கள மொழியில் ''நுவர'' என்பது நகரம் என்பதையும், ''எலிய'' என்பது ஒளியையும் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது. இது அம்[[மத்திய மாகாணம்|மத்திய மாகாணத்தின்]] தலை நகரமான [[கண்டி]]க்குத் தெற்கே 100 [[கிலோமீட்டர்]] தொலைவில் அமைந்துள்ளது. உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
 
பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் [[பிரித்தானியர்]] காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் [[இலங்கையில் குடியேற்றவாதக் கட்டிடக்கலை|குடியேற்றவாதக் கட்டிடக்கலைப்]] பாணியிலமைந்த [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/38331" இலிருந்து மீள்விக்கப்பட்டது