மரியானா அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{coord|11|21|N|142|12|E|display=title}}
[[Image:Marianatrenchmap.png|right|250px|thumb|மரியானா அகழின் அமைவிடம்]]
'''மரியானா அகழி''' (Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். [[புவிமேலோடு|புவிமேலோட்டில்]] உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,924 [[மீட்டர்]]கள்<ref name=kaiko>{{cite web|url=http://web-japan.org/atlas/technology/tec03.html|title=Japan Atlas: Japan Marine Science and Technology Center|accessdate=2007-07-04}}</ref> (35,840 [[அடி (அலகு)|அடி]]கள்; 6.78 [[மைல்]]கள்) ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[மரியானா தீவுகள்|மரியானா தீவுகளுக்குத்]] தெற்கிலும், கிழக்கிலும் [[குவாம்|குவாமுக்கு]] அருகில் அமைந்துள்ளது.
 
[[இசு-போனின்.மரியானா வளைவு|இசு-போனின்.மரியானா வளைவின்]] ஒரு பகுதியான இந்த அகழி, [[பசிபிக் புவிப்பொறைத் தட்டு]]ம், சிறிய [[மரியானா புவிப்பொறைத் தட்டு]]ம் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அகழியின் அடிப் பகுதியில், அதற்கு மேலுள்ள நீரினால் ஏற்படும் அழுத்தம் (அமுக்கம்) 108.6 [[பாசுக்கல்|மெகாபாசுக்கல்]] ஆகும். இது கடல் மட்டத்தில் உள்ள பொது [[வளிமண்டல அமுக்கம்|வளிமண்டல அமுக்கத்திலும்]] 1000 மடங்குக்கும் மேலானது. இந்த ஆழத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் மிகக் குறைவே. சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
வரிசை 7:
==அளவீடும் ஆய்வுகளும்==
[[Image:Cross section of mariana trench.jpg|400px|right|மரியானா அகழின் குறுக்கு வெட்டுத் தோற்றம்]]
மரியானா அகழி முதன் முதலாக, 1872 டிசம்பர் முதல் 1876 மே வரையான [[சலஞ்சர் ஆய்வுப் பயணம்|சலஞ்சர் ஆய்வுப் பயணத்தின்]] போது அளக்கப்பட்டது. இதன் படி இவ்வகழியின் ஆழம் 31,614 அடிகளாகப் (9,636 மீட்டர்கள்) பதிவு செய்யப்பட்டது. பின்னர் [[சலஞ்சர் 2]] ஆய்வுப் பயணத்தின்போது , திருத்தமான எதிரொலிமானியைப் பயன்படுத்தி மீண்டும் அளக்கப்பட்டது. அப்போது இதன் அதிகூடிய ஆழம் 5,950 [[பாதம் (அலகு)|பாதங்கள்]] (10,900 மீட்டர்கள், 35,760 அடிகள்) எனப் பதிவு செய்யப்பட்டது<ref name="deepestdepth">{{cite web|url=http://www.noc.soton.ac.uk/OTHERS/CSMS/OCHAL/deep.htm|title=The deepest depths|last=Ritchie|first=Steve|accessdate=2007-07-04}}</ref>. {{coord|11|19|N|142|15|E}} ஆள்கூற்றால் குறிக்கப்படும் இவ்விடம் சலஞ்சர் ஆழம் எனப்படுகின்றது.<ref name="marianatrench.com">{{cite web|url=http://www.marianatrench.com/mariana_trench-exploration_001.htm|title=The Mariana Trench - Exploration|accessdate=2007-07-04|publisher=marianatrench.com}}</ref>
 
1957 ஆம் ஆண்டில் [[வித்தியாசு]] (Vityaz) எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது.<ref>{{cite encyclopedia | title = Mariana Trench | encyclopedia = Encyclopædia Britannica | volume = | pages = | publisher = Encyclopædia Britannica | date = | id = | accessdate = 2008-02-25}}</ref> 1962 ஆம் ஆண்டில் கடற்பரப்புக் கப்பலான [[எம். வி. இசுப்பென்சர் எப். பயார்ட்]], திருத்தமான அளவுமானிகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,915 மீட்டர்கள் (35,840 அடிகள்) எனக் கணக்கிட்டது.<ref name="deepestdepth">{{cite web|url=http://www.noc.soton.ac.uk/OTHERS/CSMS/OCHAL/deep.htm|title=The deepest depths|last=Ritchie|first=Steve|accessdate=2007-07-04}}</ref> 1984 ஆம் ஆண்டில், இதற்கென உயர் சிறப்பாக்கம் பெற்ற ''தக்குயோ'' என்னும் அளவைக் கலம் ஒன்றை அனுப்பிய சப்பானியர், ஒருங்கிய பல்கதிர் எதிரொலிமானியைப் பயன்படுத்திச் சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,924 எனக் கணக்கிட்டதுடன் இதன் துல்லிய எல்லைகள் 10,920 ± 10 மீட்டர்கள் எனவும் அறிவித்தனர்.<ref name="deepestdepth" /><ref>{{cite web|url=http://www1.kaiho.mlit.go.jp/GIJUTSUKOKUSAI/ICO/nl45.html|title=New Chief Hydrographer of Japan|accessdate=2007-07-04}}</ref>
 
இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. சப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைய்க்கோ என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மரியானா_அகழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது