நிறமாலையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: eo:Spektroskopio; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:Light_dispersion_conceptual.gif|thumb|right|300px|வெண்மையான [[ஒளி]] ஒரு [[முக்கோணம்|முக்கோணப்]] பட்டகத்தின் வழியாகப் பாயும் பொழுது ஏற்படும் நிறப்பிரிகை]]
[[படிமம்:Spectre.svg|thumb|right|300px|மின்காந்த அலைவரிசையில் கண்ணுக்குப் புலப்படும் ஒளிவரிசைப் பட்டை. ஏறத்தாழ 400 [[நானோ மீட்டர்]] முதல் 700 [[நா.மீ ]] வரை அலைநீளம் கொண்ட அலைவரிசைப் பட்டை]]
'''நிறமாலையியல்''' என்பது ஒரு பொருளுக்கும் [[ஒளி]]க்கும் இடையே உள்ள நிகழ் உறவுகளைப் பற்றி ஆயும் அறிவுத்துறை. அதாவது ஒரு பொருள் [[வெப்பம்|வெப்பமுறும்]] பொழுது வெளிவிடும் ஒளியின் பண்புகளைப்பற்றியோ, அல்லது ஒரு பொருள் மீது வீசப்படும் ஒளியை அப்பொருள் எப்படிக் கடத்துகின்றது, அப்பொருளுள் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்துகின்றன போன்ற எல்லா ஒளி - பொருள் உறவாட்ட நிகழ்வுகள் பற்றியும் ஆயும் துறை.
 
நிறமாலை என்னும் இச்சொல்லில் உள்ள “நிறம்” என்பது மாந்தர்களின் [[கண்]]களுக்கு புலனாகும் ஒளியலைகள் மட்டுமல்லாமல் எல்லா அலைநீளங்களையும் கொண்ட [[மின்காந்த அலை]]வரிசையைக் குறிக்கும். வரலாற்று நோக்கில், கண்ணுக்குப் புலப்படும் ஒளியைத்தான் முதலில் குறித்து வந்தது இச்சொல். கண்ணுக்குப் புலனாகா மின்காந்த அலைகள் தவிர, ஆற்றல் அலைகளானது [[துகள்கற்றை]]யாக இயங்கி ஒரு பொருளுடன் தொடர்புபடும் நிகழ்வுகளும் இத்துறையுள் அடங்கும்.
 
ஒரு பொருளோடு தொடர்புறும் ஒளியின் பண்புகளைத் துல்லியமாய் அளவிட்டு அதன்வழி அப்பொருளைப் பற்றிய பண்புகளை அறியும் துறைக்கு [[நிறமாலை அளவையியல்]] அல்லது ''நிறமாலை அளவீட்டியல்'' எனப் பெயர். ஆனால் பொதுவாக அத்துறையும் நிறமாலையியல் என்னும் இத்துறையிலேயே அடங்கும்.
 
ஒரு [[கண்ணாடி]] [[முக்கோணம்|முக்கோணப்]] பட்டகத்தின் வழியாகப் பாயும் வெண்ணிற [[ஒளி]] எப்படி [[நிறப்பிரிகை]] அடைகிறது என்பதை இப்பக்கத்தில் உள்ள கருத்துப் படம் காட்டுகின்றது. ஒளி கண்ணாடியின் ஊடே பாயும் பொழுது வெவ்வேறு அலைநீள ஒளியலைகள் வெவ்வேறு அளவு விலகுகின்றன. குறைந்த அலைநீளம் கொண்ட, ஆனால் மிகுந்த ஆற்றலுடைய நீல/ஊதா நிறக்கதிர்கள் அதிகம் விலகுகின்றன. அதிக அலைநீளம் கொண்ட, ஆனால் ஆற்றல் குறைந்த [[சிவப்பு]] நிறக்கதிர்கள் குறைவாக விலகுகின்றன.
 
துல்லியமாய் நிறுவப்பட்ட ஒளி உள்வாங்கு (பற்றும்) பண்புகள், ஒளியுமிழ் பண்புகள் முதலிவற்றால், [[இயற்பியல்]], [[வேதியியல்]], மற்றும் பல்வேறு [[அறிவியல்]], [[பொறியியல்]], [[மருத்துவம்]] போன்ற துறைகளில் ஒரு [[வேதிப்பொருள்|வேதிப்பொருளை]] அடையாளம் கண்டுகொள்ள பயன்படுகின்றது. மிகு தொலைவில் உள்ள [[விண்மீன்]]களில் இருந்து வரும் ஒளியலைகளை அலசுவதன் வழியாக அங்கே என்னென்ன வேதிப்பொருள்கள் உள்ளன என்றும் அறிய உதவுகின்றது. [[ஒளிச்சிதறல்]] வழி பொருளுள் [[அணு]]க்கள் அமைந்துள்ள ஒழுங்கு முறையையும் அறிய இயலுகின்றது. [[இராமன் விளைவு]] போன்றவை இவற்றுக்குப் பயன்படுகின்றன (பார்க்க: [[இராமன் நிறமாலையியல்]]).
 
[[படிமம்:Fluorescent_lighting_spectrum_peaks_labelled.png|thumb|center|540px|மின் குழல்விளக்குகளில் இருந்து பெற்ற ஒளியலைகளையும் அவ்வலைகளில் உள்ள ஒளியடர்த்தியையும் கொண்டு அவை எந்த எந்த பொருட்களில் இருந்து வருகின்றன என்பதை தீர்மானிக்கலாம். [[பாதரசம்]], [[டெர்பியம்]], [[யூரோப்பியம்]] போன்ற பொருட்கள் இருப்பதை அறிய முடியும்.]]
வரிசை 25:
[[el:Φασματοσκοπία]]
[[en:Spectroscopy]]
[[eo:Spektroskopio]]
[[es:Espectroscopia]]
[[et:Spektroskoopia]]
"https://ta.wikipedia.org/wiki/நிறமாலையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது