சலஞ்சர் ஆழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Marianatrenchmap.png|right|200px|thumb|மேற்குப் பசிபிக் பெருங்கடலில் சலஞ்சர் ஆழத்தின் அமைவிடம்]]
'''சலஞ்சர் ஆழம்''' (Challenger Deep) என்பது [[கடல்|கடலில்]] அளவீடு செய்யப்பட்ட மிக ஆழமான புள்ளியைக் குறிக்கிறது. இது, ஏறத்தாழ 11,000 [[மீட்டர்]] (36,000 [[அடி (அலகு)|அடி]]கள்) ஆழத்தில் உள்ளது. அளவீட்டில் ஏற்படக்கூடிய பிழை 100 மீட்டர்களுக்கும் குறைவே. இவ்விடம் [[மரியானா தீவுகள்]] இருக்கும் பகுதியில் [[மரியானா அகழி]]யின் தென் முனையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையிலுள்ள நிலப்பகுதிகளாக தென்மேற்கே 289 [[கிலோ மீட்டர்|கிமீ]] தொலைவில் [[ஃபைசு தீவு]]ம், 306 கிமீ தொலைவில் [[குவாம்|குவாமும்]] உள்ளன. 1872-76 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த [[பிரித்தானிய அரச கடற்படை]] அளவைக் கப்பலான [[எச்.எம்.எஸ் சலஞ்சர் (1858)|எச்.எம்.எஸ் சலஞ்சர்]] என்பதன் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் பெயர் இடப்பட்டது.
 
இதுவரை மூன்று கலங்களே இப்பகுதியில் இறங்கியுள்ளன. முதலில் 1960 ஆம் ஆண்டில் [[டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு|டிரியெஸ்ட்]] (Trieste) என்னும் ஆளேற்றிய கலம் இறங்கியது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் சப்பானிய கைக்கோ என்னும் ஆளில்லாத் [[தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலம்|தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலமும்]], 2009 இல் [[நீரியசு]] என்னும் கலமும் இப்பகுதியில் இறங்கின.
"https://ta.wikipedia.org/wiki/சலஞ்சர்_ஆழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது