பௌலிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[Image:Bowling ball and pins.jpg|thumb|பௌலிங் பந்தும், இரண்டு பின்களும்]]
[[Image:Bowlingbahn.jpg|thumb|பத்துப்பின் பௌலிங் விளையாட்டுக்குரிய தளம்]]
 
 
'''பௌலிங்''' (பந்துருட்டு?) என்பது ஒருவகை [[விளையாட்டு]] ஆகும். இவ் விளையாட்டில் மட்டமான ஒடுங்கிய தளமொன்றின் ஒரு முனையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ''[[பின்]]'' (pin) என அழைக்கப்படும் பொருள்களை நோக்கி மறு முனையில் இருந்து, விளையாடுபவர் இதற்கான பந்து ஒன்றை உருட்டி அப் ''பின்''களை விழுத்த வேண்டும். பௌலிங் விளையாட்டுப் பலவகை வேறுபாடுகளுடன் விளையாடப்பட்டு வருகிறது. இவற்றுள், அமெரிக்காவில் விளையாடப்பட்டுவரும் [[பத்துப்பின் பௌலிங்]] (Ten-pin bowling) உலகின் பல இடங்களிலும் பரவலாக விளையாடப்படுகிறது. இதில் ஒரு வகை, 5000 ஆண்டுகளுக்கு முன்னரேயே பண்டைய [[எகிப்து]] நாட்டில் விளையாடப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளதாகச் சிலர் கூறுகிறார்கள்.
 
வரி 5 ⟶ 9:
மிகப் பழங்காலத்திலேயே இவ்விளையாட்டின் ஒரு வகை எகிப்தில் விளையாடப்பட்டதற்கான தடயங்கள் வரலாற்றாய்வில் வெளிப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டு வந்தாலும், இது கி.பி. 300 ஆம் ஆண்டளவில் [[ஜெர்மனி]]யிலேயே உருவானதாக வேறு சிலர் கூறுகிறார்கள். 14 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் [[மன்னர் எட்வார்டு III, இங்கிலாந்து|மூன்றாம் எட்வார்டு]] மன்னர், தன்னுடைய படைகள் இவ்விளையாட்டை விளையாடக்கூடாது என்று விதித்த தடை தொடர்பான குறிப்பொன்று உள்ளது. இதுவே பௌலின் பற்றிக் கிடைத்துள்ள முதல் எழுத்துமூல ஆவணம் எனப்படுகின்றது. [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவில்]] குடியேறவாத ஆட்சி நிலவியபோது, [[ஐரோப்பா]]விலிருந்து குடியேறியவர்கள் மூலமாக இது அமெரிக்காவுக்கும் பரவியது.
 
[[அமெரிக்க பௌலிங் மாநாட்டு அமைப்பு]] (American Bowling Congress) தொடங்கப்பட்ட 1895 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி, [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க்]] நகரத்தில், இவ்விளையாட்டுக்கான ஒழுங்கு விதிகள் வெளியிடப்பட்டனவகுக்கப்பட்டன.
 
ஆரம்ப காலங்களில், ''பின்கள்'' இதற்கென அமர்த்தப்பட்டவர்களால் கையால் அடுக்கப்பட்டன. 1952 ல், முதன் முதலாகத் தானியங்கிப் பின் அடுக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது விளையாட்டைத் துரிதமாக விளையாட உதவியது. இதன் பின்னர் இவ்விளையாட்டு வேகமாகப் பிரபலமானது.
"https://ta.wikipedia.org/wiki/பௌலிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது