"மாத்தேயோ கார்காசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
1810ஆம் ஆண்டில் இவர் செருமனிக்கு சென்றார். அங்கும் இவருக்கு விரைவிலேயே வெற்றி கிடைத்தது. 1815ஆம் ஆண்டில் இவர் பாரிசு நகரத்தில் ஆசிரியராக பணியாற்றி, பியானோவையும் கிதாரையும் கற்பித்தார். 1819ஆம் ஆண்டில் [[செருமனி]]யில் இவரது நண்பர் [[அன்தோயின் மெசொனியெர்|அன்தோயின் மெசொனியெரை]] (Antoine Meissonnier) முதல் முறையாக சந்தித்தார். பிரபலமான கிதார் கலைஞரான [[ஆண்டாயின் மெசொனியெர்|மெசொனியெர்]], [[பாரிஸ்|பாரிசு]] நகரத்திலிருந்த அவரது பதிப்பகத்தில் கார்காசியின் படைப்புகள் பலவற்றை பதிப்பித்தார்.
 
1820ஆம் ஆண்டிலிருந்து, கார்காசி தன்னுடைய பெரும்பாலான நேரத்தை [[பாரிஸ்|பாரிசு]] நகரத்திலேயே செலவிட்டார். 1822ஆம் ஆண்டில் [[இலண்டன்]] மாநகரில் தொடர்ச்சியாக அரங்கங்களில் வாசித்து பெரும் வாத்திய கலைஞராகவும் ஆசிரியராகவும் பேரும் புகழும் பெற்றார். ஆனால், பாரிசிலோ, இவரது திறமைகள் தெளிவாக புரிந்துகொள்ளப்பட நெடுங்காலம் ஆயிற்று. இதற்கு [[பெர்நாந்தோபெர்திநாந்தோ காருலி]](FernandoFerdinando Carulli) அங்கிருந்தும் ஒரு குறிப்பிடத்தக்க காரணம். ஏனெனில், காருலியின் இரசிகர்கள் அவரை மிகவும் நேசித்தனர்.
 
1824ஆம் ஆண்டில் கார்காசி மீண்டும் [[செருமனி]] சென்றார். பின்பு, அவர் இலண்டனுக்கு சென்றார். இறுதியாக, அவர் பாரிசு நகரத்திற்கு திரும்பினார். பல வருடங்களாக இவர் இங்கிருந்து இலண்டன் முதற்கொண்டு [[ஐரோப்பா]]விலுள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று வாசித்தார். 1836ஆம் ஆண்டில் மீண்டும் அரங்கங்களில் வாசிக்க துவங்கிய இவர், 1840ஆம் ஆண்டில் நிறுத்திவிட்டார். இவர், 1853ஆம் ஆண்டில் உயிர் நீத்தார்.
1,030

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/395768" இருந்து மீள்விக்கப்பட்டது