க. கைலாசபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இலங்கை]]யைச் சேர்ந்த '''க.கைலாசபதி''', ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, அக்காலத்தில் [[மலேயா]] என்று அழைக்கப்பட்ட, இன்றைய [[மலேஷியா]]வின் தலைநகரமான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தார். இளம் வயதிலேயே இவருடைய தமிழார்வம் வெளிப்பட்டது. இலங்கையின் கண்டி நகருக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான [[பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை|க. கணபதிப்பிள்ளை]], [[பேராசிரியர் வி. செல்வநாயகம்|வி. செல்வநாயகம்]], [[பேராசிரியர் சு. வித்தியானந்தன்|சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
 
பட்டம் பெற்றபின் [[கொழும்பு|கொழும்பில்]] புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான [[தினகரன்|தினகரனிலேயேதினகரனி]]லேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.
 
பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக [[பர்மிங்காம் பல்கலைக் கழகம்|பர்மிங்காம் பல்கலைக் கழக]]த்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். எழுபதுகளின் ஆரம்பத்தில் [[இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழக]]த்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் தலைவராகப் பதவியேற்றுத் திறம்படப் பணியாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/க._கைலாசபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது