"க. கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,332 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[இலங்கை]]யைச் சேர்ந்த '''க.கைலாசபதி''', ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, அக்காலத்தில் [[மலேயா]] என்று அழைக்கப்பட்ட, இன்றைய [[மலேஷியா]]வின் தலைநகரமான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தார். இளம் வயதிலேயே இவருடைய தமிழார்வம் வெளிப்பட்டது. இலங்கையின் கண்டி நகருக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான [[பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை|க. கணபதிப்பிள்ளை]], [[பேராசிரியர் வி. செல்வநாயகம்|வி. செல்வநாயகம்]], [[பேராசிரியர் சு. வித்தியானந்தன்|சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
 
==தொழில்==
பட்டம் பெற்றபின் [[கொழும்பு|கொழும்பில்]] புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான [[தினகரன்|தினகரனி]]லேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.
 
பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக [[பர்மிங்காம் பல்கலைக் கழகம்|பர்மிங்காம் பல்கலைக் கழக]]த்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். எழுபதுகளின் ஆரம்பத்தில் [[இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழக]]த்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் தலைவராகப் பதவியேற்றுத் திறம்படப் பணியாற்றினார்.
 
==இலக்கியப் பணி==
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் [[இலக்கியத் திறனாய்வு]]த் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. [[இடதுசாரி]]ச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த [[முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|முற்போக்கு எழுத்தாளர் சங்க]]த்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
 
==இவரது ஆக்கங்கள்==
இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும்.
 
மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், இளம் வயதிலேயே இவ்வுலக வாழ்வை நீத்தார். 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி, அவரது நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார்.
 
==வெளியிணைப்புக்கள்==
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3970" இருந்து மீள்விக்கப்பட்டது