வ. ஐ. சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
முனைவர் '''வ. ஐ. சுப்பிரமணியம்''' (வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், [[பெப்ரவரி 18]], [[1926]] - [[ஜூன் 29]], [[2009]]) [[மொழியியல்]] அறிஞரும் [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] முதல் துணைவேந்தரும் ஆவார்.
 
சுப்பிரமணியன் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர். வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்றவர் நெல்லை இந்துக்கல்லூரியில் இடைநிலைக் கல்வியத் தொடர்ந்தார். பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] உயர்கல்வி கற்றார். [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[இந்தியானா பல்கலைக்கழகம்|இந்தியானா பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டம் [[மொழியியல்|மொழியியலில்]] பெற்றார். இவர் சில காலம் [[புதுதில்லி]] அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் [[வையாபுரிப்பிள்ளை]] அவர்களின் அன்புக்குரிய மாணவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/வ._ஐ._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது